நிகழ்ச்சிகளுக்கு கருங்காலி மாலை அணிந்து வந்தது தொடர்பாக நடிகர் தனுஷ் கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ். இவர் சினிமா உலகில் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர், எழுத்தாளர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார். சமீப காலமாக இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.

அந்த வகையில் தனுஷ் தனுஷ் அவர்கள் தன்னுடைய சகோதரியின் மகன் பவிஷை ஹீரோவாக வைத்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதை அடுத்து தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த குபேரா படம் நல்ல வசூலை செய்தது. தற்போது தனுஷ் இயக்கி நடித்திருக்கும் படம் இட்லி கடை. இந்த படத்தில் அருண் விஜய், ராஜ்கிரன், சத்யராஜ், பார்த்திபன், ஷாலினி பாண்டே, நித்யா மேனன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
தனுஷ் திரைப்பயணம்:
இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்த படம் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்கிற்கு வெளியாக இருக்கிறது. இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மேலும், இந்த நிகழ்ச்சியில் தனுஷ் அவர்கள் கருங்காலி மாலையை அணிந்து வந்திருந்தார். அதோடு சமீப காலமாக நடிகர் தனுஷ் அவர்கள் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் கருங்காலி மாலையை அணிந்து கொண்டு தான் செல்கிறார்.

நிகழ்ச்சியில் தனுஷ்:
இந்நிலையில் இது குறித்து நிகழ்ச்சியில் கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதற்கு தனுஷ், நான் அணிந்திருப்பது என்ன மாலை என்று எனக்கு சத்தியமாகவே தெரியாது. ஒரு நாள் என்னுடைய பாட்டியை பார்க்க நான் போயிருந்தேன். அப்போது என்னுடைய தாத்தாவின் புகைப்படத்தில் தான் இந்த மாலை இருந்தது. அந்த மாலையைப் பற்றி நான் என்னுடைய பாட்டியிடம் கேட்டேன். அதற்கு அவர், இது உங்க தாத்தா 30 வருஷம் ஜெபம் பண்ணின மாலை என்று சொன்னார். அதை நான் எடுத்துக் கொள்ளட்டுமா என்று கேட்டேன்.

கருங்காலி மாலை:
அதற்கு என் பாட்டி தாத்தா புகைப்படம் முன்பு நின்று, இங்க பாருங்க இந்த பேரன் தான் வந்து மாலையை கேட்கிறான்னு சொல்லி எனக்கு விபூதி வைத்து அந்த மாலையையும் அணிவித்தார். அன்றிலிருந்து என் முன்னோர்களும் அவர்களுடைய ஆசிர்வாதமும் என்னுடன் இருப்பதாகவும் என்னை பாதுகாப்பதாகவும் எனக்கு தோன்றும். பலரும் இதைப் போட்டால் அது நடக்கும் இது நடக்கும் என்றெல்லாம் சொல்கிறார்கள். இது என்னுடைய தாத்தா உடையது. எனக்கு ஒன்றும் ஆகாது என்று கூறியிருக்கிறார்.






