கடன் பிரச்சனை பற்றி குபேரா படத்தின் விழாவில் தனுஷ் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ். இவர் சினிமா உலகில் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர், எழுத்தாளர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார்.

சமீப காலமாக இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.
அந்த வகையில் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்த படம் ராயன். இது தனுஷின் ஐம்பதாவது படம் ஆகும். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் சாதனை செய்தது. இதை அடுத்து தனுஷ் அவர்கள் தன்னுடைய சகோதரியின் மகன் பவிஷை ஹீரோவாக வைத்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி இருந்தார். இது தனுஷ் இயக்கிய மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் திரைப்பயணம்:
இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதை அடுத்து தனுஷ் இயக்கி நடித்து வரும் படம் இட்லி கடை. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், நித்யா மேனன், அருண் விஜய் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார்கள். இந்த படம் அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்களில் வெளியாகும் என்றும் அறிவித்திருந்தார்கள். தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் குபேரா.

குபேரா படம்:
இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் தனுசு உடன் நாகார்ஜுனா, ராஸ்மிகா மந்தனா, சயாஜி ஷிண்டே உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் முழுக்க முழுக்க சோசியல் திரில்லர் படம் மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். கிட்டத்தட்ட 120 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் தான் தயாரித்திருக்கிறது.

இந்த படம் இந்த மாதம் 20ஆம் தேதி வெளியாக இருப்பதால் படக்குழுவினர் மும்முரமாக ப்ரமோஷன் பணிகளை செய்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த படத்தினுடைய பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக இயக்குனர் ராஜமௌலியும் பங்கேற்று இருந்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் தனுஷ், பணம் இல்லாத நிலையில் நாம் எல்லோருக்கும் கிடைப்பது தாயின் அன்பு மட்டும் தான். அனைவருக்குமே தகுதிக்கேற்ற கடன் பிரச்சனை இருக்கிறது.
https://www.youtube.com/watch?v=kv4JLHKMEyU
150 ரூபாய் சம்பாதிக்கும் போது 200 ரூபாய்க்கு பிரச்சனை வருகிறது. ஒரு கோடி ரூபாய் சம்பாதித்தாலுமே 2 கோடிக்கு பிரச்சனை வருகிறது. எல்லா இடத்திலேயுமே பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. இஎம்ஐ, லோன் என்று எல்லா பிரச்சனையும் வருகிறது. பிரச்சனை இல்லாத இடமே இல்லை. நம்மிடம் காசு, பணம் இல்லை என்றாலும் நமக்கு கிடைப்பது அம்மாவுடைய அன்பு மட்டும் தான் என்று கூறியிருக்கிறார்.






