முடிவிற்கு வந்த 18 ஆண்டு திருமண வாழ்கை – இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் விவாகரத்தை அறிவித்த தனுஷ் – ஐஸ்வர்யா ஜோடி.

0
1054
dhanush
- Advertisement -

தமிழ் சினிமாவில் சமீப காலமாகவே பிரபலங்களின் விவாகரத்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடிகை சமந்தா விவகாரத்தை அறிவித்து இருந்தது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சமந்தாவை தொடர்ந்து தற்போது நடிகர் தனுஷ் விவாகரத்தை அறிவித்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் தனுஷ். தனுஷ், தனது சகோதரர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் அவர்கள் காதல் கொண்டேன், திருடா திருடி, தேவதைகண்டேன், ஆடுகளம், மாரி, வேலையில்லா பட்டதாரி போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்து உள்ளார்.

-விளம்பரம்-

தனுஷ் அவர்கள் சினிமா உலகில் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார்.நடிகர் தனுஷ் அவர்கள் 2004 ஆம் ஆண்டு ரஜினியின் முத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

தனுஷின் இரண்டு மகன்கள் :

மேலும், தனுஷின் மனைவியான ஐஸ்வர்யா பரத நாட்டியத்தில் சிறந்து விளங்கி வருகிறார். இவர் 3 ,வை ராஜா வை, சினிமா வீரன் என்று மூன்று படங்களை இயக்கியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் 2003 ஆம் ஆண்டு வெளியான விசில் படத்தில் நட்பே நட்பே என்ற பாடலை பாடியிருக்கிறார். தனுஷுக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள். மூத்த மகன் யாத்ரா , இளையமகன் லிங்கா ஆவார்.

இப்படி ஒரு நிலையில் தாங்கள் பிரிவதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் தங்கள் சமூக வலைதளபக்கத்தில் அறிவித்து இருப்பது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது. இதுகுறித்து தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் ’18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.

-விளம்பரம்-

இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஒரு கட்டத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் இருவரும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ஓம் நமச்சிவாயா, அன்பை பகிருங்கள்” என்று தெரிவித்துள்ளனர்.

Image

சமந்தா, இமானை தொடர்ந்து தனுஷ் :

நாகசைதன்யா இருவரும் அதிகாரப்பூர்வமாக பிரிவதாக அறிவித்தனர். இது தென்னிந்திய சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது அடங்குவதற்குள் பிரபல இசையமைப்பாளர் இமான் தனது 13 ஆண்டு திருமண வாழ்க்கையை முறித்துக்கொள்வதாக அறிவித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் இந்த அறிவிப்பு தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement