அப்பாவுடனா, அம்மாவுடனே பெற்றோர்கள் பற்றிய கேள்விக்கு மகனின் பதில் – இந்த வயதில் இப்படி ஒரு மெச்சூரிட்டியா ?

0
840
dhanush
- Advertisement -

தன் மகன் கேட்ட ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அதிர்ச்சியில் திகைத்து நின்ற ஐஸ்வர்யா- தனுஷ் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஒட்டு மொத்த தமிழகம் முழுவதும் ஐஸ்வர்யா- தனுஷ் விவாகரத்து விவகாரம் குறித்து தான் அதிகம் பேசி வருகிறார்கள். கடந்த ஆண்டு நடிகை சமந்தா- நாக சைதன்யா இருவரும் விவகாரத்தை அறிவித்து இருந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஆழ்த்தியது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத ரசிகர்களுக்கு நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து பேரிடியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிகர் தனுஷ் திகழ்ந்து வருகிறார். இவர் ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-

இதனைத் தொடர்ந்து இவர் பல வெற்றிப் படங்களை கொடுத்து உள்ளார். தனுஷ் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல துறைகளில் சாதித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் ஹாலிவுட், பாலிவுட்டிலும் சாதனை செய்து இருக்கிறார். இதனிடையே நடிகர் தனுஷ் அவர்கள் 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளார்கள்.

- Advertisement -

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து:

இப்படி தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த 18 ஆண்டுகளாக திருமண பந்தத்தில் இருந்த நிலையில் திடீரென இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதாக இருவரும் தங்கள் சமூக வலைதளபக்கத்தில் அறிவித்து இருக்கிறார்கள். இது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இவர்கள் அறிவித்த முடிவை தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பல விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிள்ளைகள்:

இந்நிலையில் தனுஷ், ஐஸ்வர்யாவின் மூத்த மகன் யாத்ரா தனது பெற்றோர் பிரிவு குறித்து கேட்ட ஒரே ஒரு கேள்வி இருவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதிக்கு 15 வயதில் யாத்ரா என்ற மகனும், பதினோரு வயதில் லிங்கா என்ற மகனும் உள்ளனர். இதில் யாத்ரா 15 வயது என்பதால் கிட்டத்தட்ட நன்றாக நல்ல மெச்சூரிட்டியான பையன் என்றே சொல்லலாம். அவர் கேட்கும் கேள்விக்கு சில சமயம் ரஜினிகாந்த்தே பதில் சொல்ல முடியாத அளவுக்கு திகைத்துப் போய் விடுவாராம்.

-விளம்பரம்-

பெற்றோர் பிரிவு குறித்து யாத்ரா கேட்ட கேள்வி:

அந்த அளவிற்கு அவர் புத்திசாலியாக வளர்ந்தது மட்டுமில்லாமல் கேள்வியும் கேட்ப்பாராம். இதுகுறித்து ரஜினிகாந்த்தே சொல்லியிருக்கிறார். இப்படி ஒரு நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா நிரந்தரமாக பிரிவததால் நீங்கள் யாருடன் இருக்க விரும்புகிறீர்கள்? என்று யாத்ராவிடம் கேட்டதற்கு அவர் கூறியிருப்பது, என் அம்மாவிடம் அவருடைய அப்பா அல்லது அம்மா இருவரில் யாராவது ஒருவருடன் தான் இருக்க வேண்டும் என்று கேட்டால் அவர் என்ன பதில் சொல்வார்? என்றும் இதே கேள்வியை எனது அப்பாவிடம் கேட்டால் அவர் என்ன பதில் சொல்வார்? என்றும் கேள்வி கேட்டவர்களை திருப்பி கேட்டதால் கேள்வி கேட்டவர்கள் வாயடைத்து திகைத்துப் போய் நின்றார்கள்.

திகைத்து நிற்கும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா:

மேலும், இந்த கேள்வி குறித்து ஐதராபாத்தில் இருக்கும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு தெரியவந்ததும் இந்த கேள்விக்கு அவர்கள் இருவராலும் பதில் சொல்ல முடியாத அளவுக்கு திக்குமுக்காடிப் போய் இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் மகள்களின் எதிர்காலம் கருதி மீண்டும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இணைந்தால் நன்றாக இருக்கும் என்று பலரும் கூறி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் யாத்ரா தங்கள் பெற்றோர்களை பிரிய விட மாட்டார், கண்டிப்பாக அவர்கள் இணைய வாய்ப்பு இருக்கிறது என்றும் சோஷியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது.

Advertisement