விவாகரத்து அறிவிப்பிற்கு பின் ஒன்றாக சந்தித்து கொண்ட தனுஷ் ஐஸ்வர்யா – அதுவும் எங்கன்னு பாருங்க.

0
500
aishwarya
- Advertisement -

விவாகரத்து அறிவுக்குப் பின் நேருக்கு நேர் தனுஷ் – ஐஸ்வர்யா சந்தித்துக் கொண்ட தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக தனுஷ் திகழ்ந்து வருகிறார். இவர் ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல வெற்றிப் படங்களை கொடுத்து உள்ளார். மேலும், தனுஷ் அவர்கள் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல துறைகளில் சாதித்து வருகிறார். அதிலும் சமீப காலமாகவே இவர் கோலிவுட், டோலிவுட், பாலிவுட், ஹாலிவூட் என அணைத்து மொழிகளிலும் கால் தடம் பதித்து வருகிறார்.

-விளம்பரம்-

இதனிடையே நடிகர் தனுஷ் அவர்கள் 2004 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் முத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனுஷின் மனைவியான ஐஸ்வர்யாவும் இயக்குனர் ஆவார். மேலும், இவர்களுக்கு யாத்ரா , லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் இருவரும் பிரிவதாக சமூக வலைதள பக்கத்தில் அறிவித்து இருப்பது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது. மேலும், 18 ஆண்டு திருமண வாழ்வில் இருந்து இருவரும் பிரிவதாக கூறி இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் பயங்கர பேசும் பொருளாக உள்ளது.

- Advertisement -

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து முடிவு:

தனுஷின் இந்த முடிவை தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பல விதமான கருத்துக்களை போட்டு வருகின்றனர். அதோடு தனுஷ்- ஐஸ்வர்யா இருவருக்கும் நடுவில் என்ன நடந்தது? என்று தெரியாமல் பல விதமாக வதந்திகளை பரப்பி வருகிறார்கள். இப்படி தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து அறிவித்ததில் இருந்து குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என பலரும் அவர்களை சேர்த்து வைக்க பல முயற்சிகள் செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட ஐஸ்வர்யாவை விவாகரத்துச் செய்வதில் தனுஷ் மனம் மாறி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவு:

ஐஸ்வர்யாவை தனுஷ் பிரிந்தாலும் முறையாக அவரை விவாகரத்து செய்யும் எண்ணம் இல்லை என்று தனுஷ் கூறியதாகச் சொல்லப்படுகிறது. குழந்தைகளுக்காக இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்று இருவருக்கும் அட்வைஸ் செய்து வருகின்றனர். மேலும், ரஜினிகாந்த் மற்றும் கஸ்தூரி ராஜா தரப்பிலிருந்து தனுஷ் ஐஸ்வர்யாவை சேர்த்து வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கூடிய விரைவில் நல்ல செய்தி வரும் என்று கூட சமீபத்தில் இவர்கள் இருவரும் கூறியிருந்தார்கள். இந்த நிலையில் பிரிய போகிறோம் என்று அறிவித்த பிறகு இருவரும் தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

தனுஷ் நடிக்கும் படங்கள்:

தற்போது தனுஷ் நடித்து முடித்துள்ள மாறன் திரைப்படம் கூடிய விரைவில் வெளியாக உள்ளது. அதுமட்டும் இல்லாமல் தனுஷ் தி கிரேட் மேன் என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்து முடித்து உள்ளார். இதை தொடர்ந்து தனுஷ் அவர்கள் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படி தொடர்ந்து தனுஷ் பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது தனுஷ் அவர்கள் வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக தனுஷ் ஹைதராபாத்தில் உள்ளது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

தனுஷ் – ஐஸ்வர்யா படங்கள்:

அதோடு இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதேபோல் ஐஸ்வர்யா மியூசிக் ஆல்பத்தை இயக்கி வருகிறார். இந்த மியூசிக் ஆல்பத்தை ஐதராபாத்தில் தான் இயக்கி வருகிறார். இவர்கள் இருவரும் ஒரே ஹோட்டலில் தான் தங்கி இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த நிலையில் நண்பர் ஒருவரின் பார்ட்டியில் தனுஷ் கலந்துகொண்ட போது அங்கு எதிர்பாராத வகையில் ஐஸ்வர்யாவை சந்தித்திருக்கிறார்.

நேரில் சந்தித்த தனுஷ் – ஐஸ்வர்யா:

இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டபோது ஒருவரை ஒருவர் கடந்து பேசாமல் சென்றிருக்கிறார்கள். மேலும், இந்த பார்ட்டியில் தனுஷ் – ஐஸ்வர்யா கலந்து கொண்டால் இருவரும் மீண்டும் மனம் விட்டு பேசி இணைய வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்த்த நண்பர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் என்று தான் சொல்லணும். இருப்பினும் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் சேர்ந்து வாழும் காலம் வரும் என்று இரு தரப்பு நட்பு வட்டாரங்களில் இருந்து தெரிவித்து உள்ளனர்.

Advertisement