காதல் கொண்டேன் படத்தை காண சோனியா அகர்வாலுடன் தியேட்டருக்கு சென்ற தனுஷ். எப்படி இருக்கார் பாருங்களேன்.

0
4521
kadhal
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருக்கிறார் நடிகர் தனுஷ். இவர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் அவர்கள் பல வெற்றிப் படங்களை கொடுத்து உள்ளார். சினிமா உலகில் இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவர். கடந்த ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த “அசுரன்” படம் அசுர வசூல் வேட்டையை செய்தது.

-விளம்பரம்-

இந்த ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த “பட்டாஸ்” படம் வேற லெவல் மாஸ் காட்டியது. இந்நிலையில் தனுஷ் அவர்கள் நடித்த படத்தின் புகைப்படம் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் காதல் கொண்டேன். இந்த படத்தில் தனுஷ், சோனியா அகர்வால், நாகேஷ், சுதீப் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

- Advertisement -

தனுஷ் அவர்களின் திரைப்பயணத்தில் ஒரு மைல் கல்லாக இந்த படம் அமைந்தது என்று சொல்லலாம். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் போது தியேட்டரில் கிடைத்த ரெஸ்பான்ஸை நடிகர் தனுஷும், சோனியா அகர்வாலும் நேரில் சென்று பார்த்து உள்ளார்கள். அப்போது எடுத்த புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதனை ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள். தற்போது இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் “ஜகமே தந்திரம்” என்ற படத்தில் நடித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து தற்போது தனுஷ் அவர்கள் மாரி செல்வராஜ் இயக்கத்தில் “கர்ணன்” என்ற படத்தில் நடித்து வருகிறார். 1991 ஆம் ஆண்டு கொடியன்குளம் மணியாச்சி ஜாதி கலவரத்தை மையமாக வைத்து கர்ணன் படம் உருவாக்கப்பட்டு வருகிறது. அதுமட்டும் இல்லாமல் தனுஷ் அவர்கள் இந்தியில் ஒரு புதிய படமொன்றில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்‌ஷய் குமாரும் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு ‘அத்ரங்கி ரே’ என்று பெயரிட்டு உள்ளனர். இந்த படம் தமிழ், ஹிந்தி ஆகிய இரு மொழிகளிலும் வெளியிட உள்ளார்கள்.

-விளம்பரம்-
Advertisement