ஈஸ்வரன் படத்தில் இடம்பெற்ற அசுரன் வசனம் – ட்விட்டரில் Bio வை மாற்றி ட்ரெண்டிங்கில் வந்த தனுஷின் புதிய பட்டப்பெயர்.

0
1683
asuran

தமிழ் சினிமாவை பொறுத்து வரை எம் ஜி ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜித் என்று பல ஆண்டுகளாக ஒரு நடிகருக்கு நிகரான மற்றொரு நடிகர் இருக்கத்தான் செய்கின்றனர். அந்த வகையில் சிம்பு – தனுஷ் தற்போது இளைய தலைமுறையின் இரண்டு துருவங்களாக திகழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவர் படங்களிலும் ஒருவரை ஒருவர் தாக்கி வசனங்கள் வருவதும் உண்டு. அந்த வகையில் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தில் ‘நீ அழிக்க வந்த அசுரன், நான் காக்க வந்த ஈஸ்வரன் டா’ என்ற வசனம் தனுஷ் ரசிகர்களை கொஞ்சம் கடுப்பில் ஆழ்த்தி இருந்தது.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் Asuran / Actor என்று Bioவில் மாற்றியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் சிம்பு, ஈஸ்வரன் படத்தில் தனுஷின் அசுரன் படத்தை தாக்கி பேசிய வசனம் தான் காரணம் என்று கூறி வருகின்றனர். அதே போல தனுஷ் தன்னுடைய bioவில் Asuran என்று மாற்றிய சிறிது நேரத்தில் ட்விட்டரில் Asuran Dhanush என்ற ஹேஷ் டேக் கூட ட்ரெண்டிங்கில் வந்துள்ளது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் நடிகர் தனுஷ், செலவராகவன் கூட்டணியில் ‘ஆயிரத்தில் ஒருவன் 2 ‘ உருவாக இருக்கிறது. அதற்கு முன்பாக தனுஷை வைத்து ‘நானே வருவேன்’ என்ற படத்தை இயக்க இருக்கிறார் செல்வராகவன். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற செல்வராகவன் பேசுகையில், “எல்லா நடிகர்களுக்கும் அடைமொழி இருக்கு. இந்தப் படத்துல இருந்து தனுஷுக்கு ஒரு அடைமொழி கொடுக்கலாம்னு இருக்கேன். இது ரொம்ப நாளா இருக்கிற எண்ணம்தான். நாங்க படம் பண்ணும்போதெல்லாம் என்கிட்ட ‘என் பேர்கூட போடமாட்டேங்குற. படத்துடைய டைட்டிலுக்கு முன்னாடி தனுஷ் நடிக்கும்னு போடேன்’னு வருத்தப்பட்டுக்கிட்டே இருப்பார்.

‘அதென்ன தனுஷ் நடிக்கும்னு, அதான் நடிக்கிறியே, அப்புறம் எதுக்கு ‘தனுஷ் நடிக்கும்?’னு சொல்லிடுவேன். அதனால, நானே என் தம்பிக்கு அடைமொழி கொடுத்ததா இருக்கட்டும்னு அதுக்காக யோசிச்சுக்கிட்டே இருக்கேன். இந்தப் படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக் பாருங்க. இது தனுஷ் ரசிகர்களுக்கு மட்டுமில்ல, தனுஷுக்கே ஸ்பெஷலா இருக்கும். ஒரு வேளை அவர் ‘இப்போ அடைமொழி வேண்டாம்’னு சொல்லிட்டார்னா. அவர் ஆசைப்பட்ட மாதிரி ‘தனுஷ் நடிக்கும்’னு போட்டுடுவேன்.”

-விளம்பரம்-
Advertisement