சொலவதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். மேலும், பல படங்களில் நடித்த இவர் ஒரு சில படங்களை இயக்கி இருந்தாலும் இவரை தற்போதும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை வைத்து தான் அடையாளப்படுத்தி வருகின்றனர். அந்த நிகழ்ச்சியில் குடும்ப பிரச்சனையால் பிரிந்த குடும்பத்தை பஞ்சாயத்து செய்து வைத்த இவர் வனிதாவின் நான்காம் திருமணத்திற்கு பஞ்சாயத்து செய்து வனிதாவிடம் வாங்கி கட்டிக்கொண்டது அனைவரும் அறிந்த ஒன்று தான். அவ்வளவு ஏன் இவரது நிகழ்ச்சியில் வந்த பெண் ஒருவர் சமீபத்தில் சாமியார் ஆனதை பார்த்து அதற்கும் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் விவாகரத்து குறித்து அறிவித்த தனஷ் – ஐஸ்வர்யா குறித்து கேட்ட ரசிகருக்கு பதில் கொடுத்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல துறைகளில் சாதித்து வருகிறார். அதிலும் சமீப காலமாகவே ஹாலிவுட், பாலிவுட்டிலும் கால்த்தடத்தை பதித்து இருக்கிறார்.
பிரிந்த தனுஷ் – ஐஸ்வர்யா :
இதனிடையே நடிகர் தனுஷ் அவர்கள் 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் முத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். தனுஷின் மனைவியான ஐஸ்வர்யாவும் இயக்குனர் ஆவார். மேலும், தனுஷுக்கு யாத்ரா , லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளார்கள். இப்படி ஒரு நிலையில் தாங்கள் பிரிவதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்கள் சமூக வலைதளபக்கத்தில் அறிவித்து இருப்பது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது.
தனுஷின் விவாகரத்து செய்தி :
இதுகுறித்து தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கை, ’18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது. இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஒரு கட்டத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரமாக முடிவு செய்துள்ளோம். மேலும், இருவரும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்து இருந்தார்.
லட்சுமி ராமகிருஷ்ணனை டேக் செய்த ரசிகர் :
தனுஷின் இந்த முடிவை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் பல விதமான கருத்துக்களை போட்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் ட்விட்டர் வாசி ஒருவர், அம்மா லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா ரெண்டு பேரையும் கூட்டிட்டு போய் சேர்த்து வையுங்கள்’ என்று கமெண்ட் செய்திருந்தார். இதற்கு பதிலளித்த லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் இருவருமே மரியாதையாக பெறுகிறார்கள் பொதுவெளியில் அசிங்கமாக பேசியோ அல்லது சட்டப்பூர்வமாக பிரிவதற்கு முன்பாக வேறு யாருடனும் ரொமான்ஸ் செய்யாமலும் எந்தவித மன வேதனையை கொடுக்காமல் பிரிந்து இருக்கிறார்கள். அவர்களை தனியாக விடுங்கள் என்று பதிவிட்டிருக்கிறார்.
விவகாரத்தை ஏன் விளம்பரப்படுத்த வேண்டும் :
இதற்கு அந்த ரசிகர் அவர்களின் இந்த முடிவை நான் மதிக்கிறேன். ஆனால், அவர்களின் சொந்த முடிவை யாருக்கும் தெரியாமல் செய்வதை விட்டுவிட்டு இப்படி ஏன் விளம்பரப்படுத்துகிறார்கள். இது அவர்களின் எண்ணற்ற ரசிகர்களை தவறான வழிக்கு செல்ல வழிவகுக்கும். முன்பெல்லாம் விவாகரத்து என்பது மிகப்பெரிய விஷயமாக தான் இருந்தது. ஆனால், தற்போது பிரபலங்களினால் விவாகரத்து மிகவும் சாதாரண விஷயமாகி விட்டது என்று கூறி இருந்தார்.
சமந்தாவின் நிலை என்ன :
இதற்கு பதிலளித்த லட்சுமி ராமகிருஷ்ணன் அதுதான் பிரச்சனையே அவர்கள் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும் தேவையில்லாத விஷயங்கள் வெளியில் வரும் தவறான தகவல்கள் பரவும் அப்படி மிகவும் கண்ணியமாக அறிவித்த சமந்தா கூட கொடூரமான விஷயங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது என்று பதிவிட்டு இருக்கிறார். லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.