‘கண்மூடிடு மானே, தாலாட்டுறேன் நானே’ – தனது மகன்களுக்காக மேடையில் எமோஷனலாக பாடிய தனுஷ். வைரலாகும் வீடியோ.

0
440
dhanush
- Advertisement -

தனது மகன்களுக்காக தனுஷ் எமோஷனலாக பாடிய பாடல் குறித்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் 18 ஆண்டு திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா அறிவித்து இருந்தது அனைவரும் அறிந்த ஒன்று. தனுஷின் இந்த முடிவை தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பல விதமான கருத்துக்களை போட்டு வருகின்றனர். மேலும், இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என பலரும் பல முயற்சிகள் செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட ஐஸ்வர்யாவை விவாகரத்துச் செய்வதில் தனுஷ் மனம் மாறி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-
Dhanush

அதோடு பிரிய போகிறோம் என்று அறிவித்த பிறகு இருவரும் தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தனுஷ் தி கிரேட் மேன் என்ற தனுஷ் திரைப்படத்தில் நடித்து முடித்து உள்ளார். இதை தொடர்ந்து தனுஷ் அவர்கள் திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி, sir ஆகிய பல படங்களில் நடித்து வருகிறார். இப்படி தொடர்ந்து தனுஷ் பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதேபோல் ஐஸ்வர்யா மியூசிக் ஆல்பத்தை இயக்கி வெளியிட்டு இருக்கிறார். பிறகு ஐஸ்வர்யா படம் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.

- Advertisement -

தனுஷின் மாறன் படம் பற்றிய விவரம்:

சமீபத்தில் தனுஷ் நடித்த மாறன் திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருந்தது. இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்கி இருந்தார். படத்தை படத்தில் மாளவிகா மோகனன், மகேந்திரன், சமுத்திரகனி, ஸ்மிருதி வெங்கட் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். மேலும், ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

ஐஸ்வர்யாவின் பயணி ஆல்பம்:

இதனிடையியே இந்த படம் ரிலீஸ் செய்தியை தனுஷ் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அந்த ட்வீட்டை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லைக்ஸ் செய்து இருந்தார். மேலும், நேற்று முன் தினம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பயணி என்ற ஆல்பத்தை வெளியிட்டார். தமிழில் அனிரூத் இசையமைத்து பாடியுள்ளார். இது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. தென்னிந்திய பிரபலங்களான அல்லு அர்ஜூன், மகேஷ் பாபு உள்ளிட்ட ஸ்டார் நடிகர்கள் இந்த பயணி ஆல்பத்தை அந்தந்த மொழிகளில் ரிலீஸ் செய்துள்ளனர்.

-விளம்பரம்-

ஐஸ்வர்யா குறித்து தனுஷ் பதிவிட்ட பதிவு:

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். நடிகர் தனுஷூம் தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் ஐஸ்வர்யாவின் பயணி ஆல்பத்தை பகிர்ந்து, ‘தோழி’ ஐஸ்வர்யாவின் பயணி ஆல்பம் வெற்றியடைய வாழ்த்துகள் என கூறி இருந்தார். தனுஷின் இந்த பதிவை கண்ட ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்து கமெண்ட் போட்டு இருந்தார்கள். இந்த நிலையில் தனுஷ் அவர்கள் மேடையில் எமோஷனலாக பாடிய வீடியோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் இசை ஜாம்பவனாக திகழ்பவர் இளையராஜா. இவர் சில வருடங்களாகவே இசைக்கச்சேரிகள் நடத்துவதில் அதிக ஆக்டிவாக இருக்கிறார்.

மகன்களுக்காக தனுஷ் செய்த வேலை:

அந்த வகையில் சமீபத்தில் இவர் Rock With Raja என்ற கச்சேரி நடத்தி இருந்தார். அதில் தனுஷ் தனது மகன்கள் லிங்கா மற்றும் யாத்ரா உடன் கலந்துகொண்டார். அப்போது மேடை ஏறிய தனுஷ் தனது மகனுக்காக இளையராஜாவிடம் அனுமதி வாங்கி ஒரு எமோஷனலான பாடல் பாடினார். அதை பார்த்து தனுஷ் உடைய மகள்கள் இருவரும் கை தட்டி சந்தோஷப்பட்டு இருந்தார்கள். அந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் தனுஷுக்கு வாழ்த்துக்களை கூறுவது மட்டும் இல்லாமல் நீங்களும் ஐஸ்வர்யாவும் குழந்தைகளுக்காக சேர்ந்து வாழுங்கள் என்று கமெண்ட்டுகளை போட்டு வருகிறார்கள்.

Advertisement