தனுஷ் விவாகரத்து – நீதிமன்றத்தில் முறையிட்ட ரீல் பெற்றோர்கள். ரஜினி வைத்துள்ள வேண்டுகோளை பாருங்க.

0
733
dhanush
- Advertisement -

மகனையும், மருமகளையும் சேர்த்து வையுங்கள் என தனுஷ் பெற்றோர் என்று சொல்லி நீதிமன்றத்தை நாடி உள்ள கதிரேசன் தம்பதியினர் அளித்து உள்ள பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலமாகவே சினிமா பிரபலங்களின் விவாகரத்து குறித்த செய்திகள் சோசியல் மீடியாவில் அதிகரித்து வருகிறது. சில தினங்களாகவே ஒட்டுமொத்த தமிழகம் முழுவதும் தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து பற்றிய பேச்சு தான் அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு நடிகை சமந்தா- நாக சைதன்யா இருவரும் விவகாரத்தை அறிவித்து இருந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஆழ்த்தியது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத ரசிகர்களுக்கு நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து பேரிடியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிகர் தனுஷ் திகழ்ந்து வருகிறார்.

-விளம்பரம்-

இவர் ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு தனுஷ் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் பல வெற்றிப் படங்களை கொடுத்து உள்ளார். மேலும், தனுஷ் அவர்கள் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல துறைகளில் சாதித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் ஹாலிவுட், பாலிவுட்டிலும் கால்த்தடத்தை பதித்து இருக்கிறார்.

- Advertisement -

தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து:

இதனிடையே நடிகர் தனுஷ் அவர்கள் 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா , லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளார்கள். இப்படி ஒரு நிலையில் தாங்கள் பிரிவதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்கள் சமூக வலைதளபக்கத்தில் அறிவித்து இருப்பது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படி இவர்கள் அறிவித்த முடிவை தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பல விதமான கருத்துக்களை போட்டு வருகின்றனர்.

தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து வரும் கதைக்கள்:

மேலும், இவர்களுடைய விவாகரத்து குறித்து பலரும் கண்ணு, மூக்கு, காது வைத்து பல விதமாக கதைகளை அவிழ்த்து விட்டும் வருகின்றனர். இந்த லிஸ்டில் தற்போது இன்னொன்றும் சேர்ந்துள்ளது. அது என்னவென்றால், தனுஷ் தன்னுடைய மகன் என்று சொல்லி நீதிமன்றத்தை நாடி உள்ள கதிரேசன் தம்பதியர் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் கதிரேசன். இவருடைய மனைவி மீனாட்சி. இந்த தம்பதியினரின் மூத்த மகன் கலையரசன். இவர் பிளஸ் 1 படிக்கும் போது காணாமல் போய்விட்டார்.

-விளம்பரம்-

தனுஷ் என் மகன் என்று வழக்கு தொடர்ந்த தம்பதியினர்:

இந்த நிலையில் சினிமாவில் நடித்து வரும் தனுசை பார்த்துவிட்டு தனது மகன் கலையரசன் தான் தனுஷ் என்றும் அவரை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள் கதிரேசன் தம்பதியினர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இப்படி ஒரு நிலையில் நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா தற்போது பிரிய போவதாக தொலைக்காட்சியில் வெளியான செய்தியை பார்த்து கதிரேசன் தம்பதியினர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் வசித்து வரும் இந்த தம்பதியினர் தங்களது மகன் தனுஷ் மற்றும் மருமகள் ஐஸ்வர்யா இருவரும் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

தனுஷ்- ஐஸ்வர்யா சேரனும் என்று அழுத கதிரேசன் தம்பதியினர்:

அதுமட்டுமில்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினரை சேர்த்து வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக இவர்களிடம் பேட்டி எடுக்கப்பட்டபோது மீனாட்சி அம்மாள் கூறியது, நாங்கள் வயதான காலத்தில் கூட ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றோம். கலையரசா! உனது பிள்ளைகள், மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று கண்ணீர் மல்க கேட்டுள்ளார். இப்படி இவர்களின் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு தனுஷ் தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement