விஜய் ரசிகர்களுக்கு போட்டியாக தனுஷுக்கு சிலை வைத்து பட்டாஸ் கிளப்பிய தனுஷ் ரசிகர்கள்.

0
1278
dhanush
- Advertisement -

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். இவர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்தார். தனுஷ் அவர்கள் சினிமா உலகில் நடிகர் மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல திறமையை காண்பித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் அவர்கள் காதல் கொண்டேன், திருடா திருடி, தேவதைகண்டேன், ஆடுகளம், மாரி, வேலையில்லா பட்டதாரி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார். மேலும், இவர் “ஒய் திஸ் கொலவெறி” என்ற பாடல் மூலம் உலக முழுவதும் உள்ள ரசிகர்களை தெறிக்க விட்டார்.

-விளம்பரம்-
Related image

- Advertisement -

கடந்த ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளி வந்த படம் “அசுரன்”. இந்த படம் அசுர வசூல் வேட்டையை ஆடியது. இதனைத் தொடர்ந்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய “என்னை நோக்கி பாயும் தோட்டா” படத்தில் தனுஷ் நடித்து இருந்தார். இந்த படம் நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு சமீபத்தில் தான் வெளி வந்தது. இந்த படமும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. பின்னர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்து உள்ள படம் “பட்டாஸ்”. இந்த படம் பொங்கல் பண்டிகை அன்று திரைக்கு வந்து அதிர வைத்தது. இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்து உள்ளது. கொடி படதிற்கு பிறகு இயக்குநர் துரை செந்தில் குமார் அவர்கள் இரண்டாவது முறையாக தனுஷ் உடன் கூட்டணி சேர்ந்து உள்ளார். இந்த பட்டாஸ் திரைப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தில் சினேகா, மெஹ்ரின் ஆகிய இருவரும் தனுஷுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். பட்டாஸ் படம் தற்காப்பு கலையின் முக்கியத்துவத்தையும், பெண்கள் பாதுகாப்பை குறிக்கும் வகையில் இருந்தது. தனுஷின் பட்டாஸ் படம் பொங்கலுக்கு சரவெடி போட்டு அதிர வைத்தது. இந்நிலையில் நடிகர் தனுசுக்கு அவருடைய ரசிகர்கள் 7 அடி உயரத்தில் சிலை வைத்து பட்டாஸ் படத்தை கொண்டாடி வருகிறார்கள்.

-விளம்பரம்-
dhanush

தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது பட்டாஸ் படத்தை பிரபலப்படுத்தும் வகையில் ரசிகர்கள் ஈடுபட்டு உள்ளார்கள் என்றும் கூறுகிறார்கள். இந்த சிலை சுமார் 60 ஆயிரம் ரூபாய் செலவில் வைத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. வேட்டி, சட்டையில் கண்ணாடி அணிந்த படி தனுஷ் நிற்பது போல இந்த சிலையை வடிவமைத்து உள்ளார்கள். தற்போது பொது மக்களும், ரசிகர்களும் இந்த சிலை அருகில் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். ஏற்கனவே பிகில் படத்திற்காக விஜய் ரசிகர்கள் விஜய்க்கு சிறிய சிலை ஒன்றை வைத்தனர். ஆனால். இப்படி தனுஷுக்கு முழு உருவ சிலையை வைத்து விஜய் ரசிகர்களை மிஞ்சி விட்டார்கள் தனுஷ் ரசிகர்கள்.

Advertisement