வயநாடு நிலச்சரிவு சம்பவம், தனுஷ் கொடுத்த நிவாரணநிதி- எவ்வளவு கொடுத்தார் தெரியுமா ?

0
299
- Advertisement -

வயநாடு நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகர் தனுஷ் வழங்கி இருக்கும் நிவாரணநிதி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரமாகவே கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்த செய்தி தான் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து கேரளாவில் பெய்த மழையால் திருச்சூர், கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது.

-விளம்பரம்-

பின் கடந்த சில வாரத்திற்கு முன் பெய்த கனமழையால் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு மூன்று கிராமங்கள் மண்ணுக்குள் சென்றது. இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த பேரழிவால் இதுவரை 430க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளார்கள். இன்னும் இந்த இயற்கை பேரழிவால் உயிர் இழப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு இயற்கை பேரழிவு இந்த முறை ஏற்பட்டிருக்கிறது.

- Advertisement -

வயநாடு நிலச்சரிவு சம்பவம்:

இந்த பேரழிவு மொத்த தேசத்தையும் உலுக்கி இருக்கிறது. NDRF, ராணுவம், உள்ளூர் போலீஸ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் என பல அமைப்புகள் இரவு பகல் என்று பாராமல் 13 நாட்களுக்காக மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி, கேரள முதலமைச்சர், பிரபலங்கள் என பலரும் உயிரிழந்த குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்து இருந்தார்கள். அதோடு மக்களை மீட்கும் பணியில் மத்திய அரசு அனைத்து விதத்திலும் உறுதுணையாக இருக்கும் என்று கூறி இருக்கிறது.

அரசாங்க நிவாரண நிதி:

பிரதமர் மோடி அவர்கள் இந்த நிலச்சரிவு சம்பவத்தால் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாய், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தருவதாகவும் அறிவித்திருந்தார். தமிழகம் சார்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 கோடி ரூபாய் நிவாரண நிதியாக வழங்கியிருந்தார். நடிகர் மோகன்லாலும் ராணுவ சீருடையில் பாதிக்கப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வை மேற்கொண்டு மீட்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்.

-விளம்பரம்-

பிரபலங்கள் நிவாரணநிதி:

மேலும், அவர் நிவாரண தொகையாக 3 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார். பின் நடிகர்கள் ஜோதிகா, கார்த்தி மற்றும் சூர்யா ஆகியோர் ரூபாய் 50 லட்சம் கேரளா முதல்வர் நிவாரண நிதிக்காக வழங்கி இருந்தார்கள். அதிமுக சார்பில் எடப்பாடி.கே.பழனிசாமியும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கே.செல்வபெருந்தகையும் சேர்ந்து ஒரு கோடி ரூபாய் கேரளா நிவாரண நிதிக்காக கொடுத்திருந்தார்கள். மேலும், நடிகர் விக்ரம் 20 லட்சம், நடிகைகள் குஷ்பு, மீனா, சுஹாசினி, லிசி ஆகியோர் ரூ.1 கோடி என்று உதவி செய்து இருக்கிறார்கள்.

தனுஷ் தந்த நிவாரணநிதி:

அதேபோல் விக்னேஷ் சிவன்-நயன்தாரா, ராஷ்மிகா மந்தனா, அல்லு அர்ஜுன், சிரஞ்சீவி, ராம்சரண், மம்முட்டி, துல்கர் சல்மான், பகத் பாஸில், பிரபாஸ் போன்ற பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து இருக்கிறார்கள். இந்த வரிசையில் தற்போது நடிகர் தனுஷும் இணைந்து இருக்கிறார். இவர் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 25 லட்சம் ரூபாய் நன்கொடையாக கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்திருக்கிறார். தற்போது இந்த தகவல் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement