ஹாலிவுட் ரீமேக்கில் தனுஷ்.! இயக்குனர் யார் தெரியுமா.!

0
494
Dhanush
- Advertisement -

ஹாலிவுட்டில் தனுஷ் நடிக்கும் படம், ‘பக்கிரி’. ஜூன் 21-ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. இதைத் தொடர்ந்து ‘ராஞ்சனா’ பட இயக்குநர் ஆனந்த் எல் ராயுடனும் ஓர் பாலிவுட் படத்திலும் கமிட்டாகியிருக்கும் தனுஷ், 2018-ல் வெளியான ‘அந்தாதுன்’ பட ரீமேக்கிலும் நடிக்க இருக்கிறார்.

-விளம்பரம்-
Image result for dhanush

‘அசுரன்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில்தான் முடிந்தது. தற்போது ‘பக்கிரி’ பட புரொமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இதை முடித்துவிட்டு அசுரன் படப்பிடிப்புக்கு மீண்டும் கோவில்பட்டி செல்லவிருக்கிறார், தனுஷ். நடுவில் ‘ராஞ்சனா’ பட இயக்குநரான ஆனந்த் எல் ராயுடன் ஒரு பாலிவுட் படத்திலும் கமிட்டாகியிருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

- Advertisement -

இந்நிலையில் பாலிவுட்டில் வெளியான ‘அந்தாதுன்’ படத்தை தமிழில் ரீமேக் செய்யவிருப்பதாகவும், அதில் தனுஷ் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.2018-ல் ஶ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியான பாலிவுட் படம், ‘அந்தாதுன்’. தபு, ஆயுஷ்மான் குரானா, ராதிகா அப்தே போன்றவர்கள் இதில் நடித்திருந்தனர்.

ப்ளாக் காமெடி, க்ரைம் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம், 10 மடங்கு வசூல் பெற்று பெறும் சாதனையைப் படைத்தது. விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தற்போது தமிழில் இதன் ரீமேக் உரிமையைப் பெறுவதற்கான பேச்சுவார்தைகள் போய்க்கொண்டிருக்கிறது.


-விளம்பரம்-
Advertisement