தமிழில் பேசுங்கள்.! பாரிஸ் மேடையில் கெத்துக்காட்டிய நடிகர்..! அசந்து போன ஹாலிவுட் நடிகர்கள்

0
647
dhanush

தமிழ் சினிமாவில் இளம் ஹீரோக்களில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் நடிகர் தனுஷ். நடிப்பையும் தாண்டி பாடல்கள்,இயக்கம் என்று பன்முக திறமைகளை கொண்டுள்ளார். சமீப காலமாக நடிகர் தனுஷின் பேச்சுக்கள் ரசிகர்களை மிகவும் கவருகிறது. சினிமாவில் மிகவும் ஸ்டைலாக இருக்கும் தனுஷ் சில ஆண்டுகளாக தனது மாமனார் ராஜினியை போல எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் மிகவும் இயல்பாக பேசி ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று விடுகிறார்.மேலும் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் தமிழர் கலாச்சாரத்தில் உடை அணிந்து செல்வதை வழக்கமாக்கி கொண்டார் தனுஷ்.

நடிகர் தனுஷ், தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் “வட சென்னை ” என்ற படத்தில் நடித்த வருகிறார். பிரபல ஹாலிவுட் இயக்குனர் கென் ஸ்காட் இயக்கியுள்ள ” தி எக்ஸ்ட்ராடினரி ஜார்னி ஆஃப் பகீர் ” என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஆங்கிலம் மற்றும் பிரெஞ் மொழிகளில் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் பாரிஸ் நாட்டில் சமீபத்தில் நடைபெற்றுது. இந்த விழாவில் தோன்றிய தனுஷிற்கு ரசிகர்கள் ஆரவார வரவேற்பு அளித்தனர். அத்துடன் நீங்கள் தமிழில் பேச வேண்டும் என்று அன்பு கட்டளையும் விடுத்தனர்.

ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று நடிகர் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி என்ற படத்தில் இருந்து ஊதுங்கடா சங்கு என்று பாடலை பாடியதும் பாரிஸ் அரங்கமே அதிர்ந்தது. ஹாலிவுட் மேடையில் தமிழில் பாடி அசத்திய தனுஷிற்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.