ஏமாற்றிய மூன்று பெண்கள் – தனுஷ் உருக்கம். அவரது மனைவியையும் சேர்த்து சொல்றாரோ ? மீது ரெண்டு பொண்ணு யாரு ?

0
427
dhanush
- Advertisement -

தனது வாழ்க்கையில் மூன்று பெண்கள் தன்னை ஏமாற்றியதாக தனுஷ் அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தனுஷ். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் 18 ஆண்டு திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தது அனைவரும் அறிந்த ஒன்று.

-விளம்பரம்-

தனுஷின் இந்த முடிவை தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலருக்கும் பேரதிர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. மேலும், இது தொடர்பாக பலரும் பல விதமான கருத்துக்களை போட்டு வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என பலரும் பல முயற்சிகள் செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட ஐஸ்வர்யாவை விவாகரத்துச் செய்வதில் தனுஷ் மனம் மாறி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

- Advertisement -

தனுஷ் நடிக்கும் படங்கள்:

ஆனால், இது குறித்து தனுஷ் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு பிரிய போகிறோம் என்று அறிவித்த பிறகு இருவரும் தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். தற்போது தனுஷ் தி கிரேட் மேன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து உள்ளார். இதை தொடர்ந்து தனுஷ் அவர்கள் திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி, sir ஆகிய பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் தனுஷ் நடித்த மாறன் திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருந்தது.

ஐஸ்வர்யா ஆல்பம் சாங்:

இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்கி இருந்தார். படத்தில் மாளவிகா மோகனன், மகேந்திரன், சமுத்திரகனி, ஸ்மிருதி வெங்கட் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். மேலும், ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. அதேபோல் ஐஸ்வர்யா மியூசிக் ஆல்பத்தை இயக்கி வெளியிட்டு இருக்கிறார். பிறகு ஐஸ்வர்யா படம் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.

-விளம்பரம்-

தனுஷ் அளித்த பேட்டி:

இப்படி இவர்கள் இருவரும் தங்களின் கேரியரில் கவனம் செலுத்தி வந்தாலும் இவர்களின் விவாகரத்து குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகிறது. அதோடு இவர்கள் பிரிந்ததற்கான காரணம் தெரியாததாலும் இணையத்தில் இவர்கள் பிரிவு குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் நடிகர் தனுஷ் அவர்கள் தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் தனது வாழ்க்கையில் முக்கியமானவர்கள் குறித்து கூறியிருப்பது, நான் வாழ்க்கையில் மிக மிக நம்பிக்கை வைத்த நான்கு பேரில் ஒருவர் வெற்றிமாறன். மீதி மூன்று பேர் பெண்கள்.

தனுஷை ஏமாற்றிய மூன்று பெண்கள்:

அவ்வளவு நம்பிக்கையை நான் யார் மீதும் வைத்தது இல்லை. ஆனால், அந்த மூன்று பெண்களும் என்னை கீழே தள்ளி விட்டார்கள். என் நம்பிக்கையை காப்பாற்றிய ஒரே ஆள் வெற்றிமாறன் தான் என்று கூறியிருந்தார். இப்படி தனுஷ் கூறியிருந்த கருத்து சோசியல் மீடியாவில் படு வைரலானது. மேலும், இதை கேட்ட ரசிகர்கள் யார் அந்த மூன்று பெண்கள்? ஒருவர் ஐஸ்வர்யா மற்ற 2 பேர் யார்? என்றும் சிலர் ஐஸ்வர்யாவை வெறுப்பேத்தவா? இந்த பதில் என்றும், எல்லாத்தையும் விட்டு தள்ளுங்கள் குழந்தைகளுக்காக மகிழ்ச்சியாக இருங்கள் என்றும் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement