கண்டா வரச்சொல்லுங்க பாடலை தொடர்ந்து , தேவாவின் கான குரலில் வெளியான கர்ணன் படத்தின் அடுத்த பாடல்.

0
2280
dhanush
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் நடிகர் தனுஷ். தனுஷ் அவர்கள் சினிமா உலகில் நடிகர் மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல திறமையை காண்பித்து வருகிறார். கடந்த ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளி வந்த “அசுரன்” படம் அசுர வசூல் வேட்டையை ஆடியது. தற்போது ஜாகமே தந்திரம், கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படம் என்று படு பிசியாக நடித்து வரும் தனுஷ், பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன்’ படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இது தனுஷின் 41 வது படமாகும். இவர்களுடன் யோகி பாபு. மலையாள நடிகர் லால் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு இந்த படத்தை தயாரிக்கிறார்.1991 ஆம் ஆண்டு கொடியன்குளம் மணியாச்சி ஜாதி கலவரத்தை மையமாக வைத்து தான் தனுஷ் நடிக்கும் கர்ணன் படம் உருவாக்கப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது.

இதையும் பாருங்க : மண்ணை விட்டு மறைந்தாலும் மனதை விட்டு மறையாத சித்ரா – பெண் ரசிகைகள் போட்டுள்ள டாட்டூவை பாருங்க.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் இருந்து ‘கண்டா வரச் சொல்லுங்க’ என்ற பாடல் வெளியாகி இருந்தது.இந்தப் பாடலை அழகிய நாட்டுப்புறகுரலில் பாடி பலரின் கவனத்தை ஈர்த்தார் மாரியம்மாள். மேலும், இந்த பாடல் பிரபல நாட்டுப்புற பாடகர் தேக்கம்பட்டி சுந்தர்ராஜனின் ஐயப்பன் பாடலில் இருந்து எடுக்கப்பட்டது என்று படக்குழுவே ஒப்புக்கொண்டனர்.

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் அடுத்த பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. ‘ஏ ஆளு பண்டாரத்தி’ என்று துவங்கும் இந்த பாடலுக்கு பண்டாரத்தி புராணம் என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. யுகபாரதி எழுதியுள்ள இந்த பாடலை தேனிசை தென்றல் தேவா தனக்கே உரித்த கானக் குரலில் பாடியுள்ளார்.மேலும், இந்த பாடலுக்கு சாண்டி மாஸ்டர் தான் கொரியோகிராப் செய்திருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement