தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தனுஷ். தற்போது இவருடைய நடிப்பில் உருவாக்கி இருக்கும் படம் குபேரா. இந்த படத்தை இயக்குனர் சேகர் கம்முலா என்பவர் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஸ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:
படத்தில் மிகப்பெரிய தொழிலதிபராக நீரஜ் இருக்கிறார். இவர் க்ளோபல் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் பல லட்சம் கோடி மதிப்பில் ஆன எண்ணை மற்றும் எரிவாயு ஒப்பந்தத்தை கைப்பற்ற நினைக்கிறார். நீரஜ் உடைய திட்டம் நடக்க வேண்டும் என்றால் ஒரு லட்சம் கோடி தர வேண்டும் என்று மந்திரி கேட்கிறார். இந்த டீலிங்க் ஒத்து கொண்ட நீரஜ், இந்த திட்டத்தை தன்னுடைய பெயரிலோ, நிறுவனத்தின் மூலமோ செய்யக்கூடாது என்று நாகார்ஜுனாவை வைத்து செய்ய திட்டம் போடுகிறார்.
நாகர்ஜுனாவை சட்டவிரோதமாக இந்த செயலை செய்ய நினைக்கிறார்கள். நாகர்ஜுனா முன்னாள் சிபிஐ
அதிகாரியாக இருந்தவர். இவர் நேர்மையான அதிகாரியாக தான் இருந்தார். ஆனால், செய்யாத தவறுக்காக இவரை கைது செய்துஅடைத்து சிறையில் இருக்கிறார்கள். ஏழு ஆண்டுகள் இவர் சிறை தண்டனையும் அனுபவித்து இருக்கிறார். நேர்மையாக இருந்துமே அரசாங்கம் தனக்கு குற்றவாளி பட்டம் சுமத்தியதால் அவருக்கு அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லை. இதனால் இவர் நீரஜினுடைய திட்டத்திற்கு ஒத்துக் கொள்கிறார்.

பின் நீரஜ் ஒரு லட்சம் கோடியில் 50 ஆயிரம் கோடி கருப்பு பணமாகவும் மீதி வெள்ளை பணமாகவும் தர வேண்டும். இதில் எனக்கும் என்னுடைய நிறுவனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறார். அதற்கு நாகர்ஜுனா, இதை பினாமி மூலம் தான் செய்ய வேண்டும். அதற்காக இவர் பிச்சைக்காரர்களை தேர்வு செய்கிறார். வெவ்வேறு மாவட்டங்களிலிருந்து நான்கு பிச்சைக்காரர்களை நாகர்ஜுனா தேர்ந்தெடுக்கிறார். அவர்களுடைய பெயரில் புதிய நிறுவனங்களை தொடங்கி ஒவ்வொரு நபரின் மூலமாக 10,000 கோடி பணத்தை பரிவர்த்தனை நடத்துகிறார்.
மேலும், பணம் கை மாறிய பிறகு அந்த பிச்சைக்காரர்களையும் கொன்று விடுகிறார்கள். அப்படி தான் இந்த
இந்த பிரச்சினையில் தனுஷும் சிக்கிக் கொள்கிறாள். தனுஷின் மீதும் கோடி கணக்கில் பரிவர்த்தனை நடக்க திட்டம் போடுகிறார்கள். ஆனால், அந்த உண்மை அறிந்ததுமே தனுஷ் அங்கிருந்து தப்பித்து செல்கிறார். தனுஷ் பெயரில் 10 கோடி ரூபாய் பணம் இருக்கிறது. ஆனால், அது தனுஷ் இல்லாமல் செய்ய முடியாது என்பதால் ஊர் முழுவதுமே தனுஷை சல்லடை போட்டு தேடுகிறார்கள்.

இதற்கு இடையில் ராஷ்மிகா தன்னுடைய காதல் தோல்வியில் இருக்கிறார். அப்பொழுதுதான் தனுஷ், ராஸ்மிகாவை சந்திக்கிறார். இறுதியில் தனுஷ் என்ன ஆனார்? கோடிக்கணக்கான பணம் கைமாற்றப்பட்டதா? ராஸ்மிகா நிலை என்ன? நாகார்ஜுனா என்ன செய்தார்? என்பது தான் படத்தினுடைய மீதி கதை. அழுக்கு படிந்த சட்டையும் கையில் குட்டி நாயும் வைத்து பிச்சைக்காரனுடைய வாழ்க்கையை அப்படியே வாழ்ந்து காட்டி இருக்கிறார் தனுஷ். ஒவ்வொரு இடங்களிலும் சாப்பாட்டுக்காக தனுஷ் கையேந்தும் காட்சி பார்வையாளர்களை கலங்க வைத்திருக்கிறது.
தன்னுடைய நடிப்பின் மூலம் தனுஷ் மீண்டும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்து விட்டார் என்றே சொல்லலாம். இவரை அடுத்து வரும் நாகர்ஜுனா தன்னுடைய அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார். நேர்மையாக இருந்து கொள்ளைக்காரர்களின் சதிக்கு ஒத்துக் கொள்ளும் அவருடைய நடிப்பு ஆக்ரோஷமாக இருக்கிறது. கண்கள் மூலமாகவே அவர் சொல்லும் வசனங்கள் எல்லாம் ஆர்ப்பரிக்கிறது. ஜிம் சர்பினுடைய வில்லத்தனம் பாராட்டுக்குரிய வகையில் இருக்கிறது. தமிழ் சினிமாவிற்கு ஒரு நல்ல வில்லன் கிடைத்துவிட்டார் என்று சொல்லலாம்.
இவர்களைத் தொடர்ந்து படத்தில் ராஷ்மிகா தனக்கு கொடுத்த வேலையை கனக்கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார். முதல் பாதி பொறுமையாக சென்றாலும் இரண்டாம் பாதி பிரமாதமாக இருக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியை இயக்குனர் அருமையாக செய்திருக்கிறார். கதைக்களம் நன்றாக இருந்தாலும் அதைக் கொண்டு சென்ற விதத்திலும் இயக்குனர் பாராட்டை பெற்றிருக்கிறார். ஆனால், படத்தினுடைய நீளம் தான் பார்வையாளர்கள் மத்தியில் சலிப்படையை வைத்திருக்கிறது.
https://youtu.be/GYgGowSo1e0?si=1Xe5A0uP_2Kon-d6
படத்தின் நீளம் அதிகமாக இருப்பதால் சில காட்சிகள் வேகமாகவே செல்கிறது. இதை அடுத்து எடிட்டிங், ஒளிப்பதிவு எல்லாமே நன்றாக இருக்கிறது. இந்த உலகம் பணக்காரனுக்கு மட்டும் சொந்தமில்லை. பிச்சை எடுப்பவர்களும் மனிதர்கள் தான் என்பதை இயக்குனர் சொல்லி இருக்கும் கருத்து பாராட்டுக்குரிய வகையில் உள்ளது. ஆனால், சில இடங்களில் அழுத்தமான கருத்தை கொஞ்சம் சுவாரசியமாக காண்பித்திருக்கலாம்.
மொத்தத்தில் குபேரா ஒரு முறை சென்று பார்க்கலாம்.
நிறை:
தனுஷ், ராஷ்மிகா, நாகர்ஜுனா நடிப்பு அருமை
இரண்டாம் பாதி நன்றாக இருக்கிறது
கிளைமாக்ஸ் காட்சி சூப்பர்
எடிட்டிங், ஒளிப்பதிவு,பின்னணி இசை நன்றாக இருக்கிறது
கதைக்களம் சிறப்பு

குறை:
படத்தின் நிலத்தை குறைத்திருக்கலாம்
முதல் பாதி பொறுமையாக செல்கிறது
சில இடங்களில் வசனங்களை அழுத்தமாக சொல்லி இருக்கலாம்
மொத்தத்தில் குபேரா - அனைவரும் கொண்டாடும் படம்






