சினிமா நடிகர்கள் பலர் விவாகரத்து பெற்ற பின்னர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டு இருக்கின்றனர். ஒரு சிலர் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்க்கை முழுவதும் சிங்கிளாகவே இருந்து விடுகின்றனர். ஆனால், இந்த நடிகர் விவாகரத்து பெற்ற பின் பல பெண்களுடன் டேட்டிங் செல்ல வேண்டும் என்று குறிக்கோளுடன் பயணித்து இதுவரை  335 பெண்களோடு டேட்டிங் சென்றுள்ளார். அதுவும் பாட்டி முதல் இளம் பெண்கள் வரை டேட்டிங் சென்று இருக்கிறாராம்.

தமிழில் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘மயக்கம் என்ன’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் சுந்தர் ராமு. மயக்கம் என்ன படத்திற்கு பின் 3, நான் சிகப்பு மனிதன், கணிதன் போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற இவர்,  105 வயது பாட்டி, அவரது அபார்ட்மெண்ட் பிளாக்கில் இருந்து குப்பை சேகரிக்கும் ஒரு பெண், 90 வயதில் ஒரு அயர்லாந்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி, ஒரு நடிகை, மாடல்கள், ஒரு யோகா ஆசிரியர் என்று இதுவரை 335 பெண்களோடு டேட்டிங் சென்றுள்ளார்.

இதையும் பாருங்க : 25 வயதினிலே – தனது இளம் வயது புகைப்படத்தை பகிர்ந்த ஜேம்ஸ் வசந்தன். என்னா ஸ்மார்ட்டா இருக்கார் பாருங்க.

Advertisement

ஆனால் வருடத்தில் அனைத்து நாளும் அதாவது 365 நாட்கள் வெவ்வேறு பெண்களுடன் டேட்டிங் செல்ல வேண்டும் என்பதுதான் இவரது இலக்காம். இப்படி ஒரு வித்தியாசமான குறிக்கோளை ஏற்படுத்திக்கொள்ள காரணத்தையும் அவர் கூறியிருக்கிறார். 365 டேட்டிங் திட்டத்தை, 2014 டிசம்பர் 31 ஆம் தேதி ஃபேஸ்புக்கில் அறிவித்த சுந்தர், பெண்கள் என்னிடம் வெளியே வருகிறீர்களா என்று கேட்கவேண்டும், திட்டமிட வேண்டும், ஒரு இடத்தைத் தேர்ந்தெடுக்கவேண்டும், உணவிற்கு பணம் கொடுக்கவேண்டும் அல்லது சமைக்கவேண்டும்.

Advertisement

உணவில் சேமித்த பணத்தை, அதிகம் வெளியே தெரியாத தொண்டு நிறுவனங்களுக்கு ஒவ்வொரு மாதத்தின் முடிவிலும் தான் அளிக்கப்போவதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். இதற்கான காரணத்தை கூறியுள்ள அவர் சமுதாயத்தில் ஆணும் பெண்ணும் சமம் என்பதையும் பெண்களுக்கு தொடர்ந்து நடந்துவரும் பாலியல் கொடுமைகளை தடுக்கவும் தான் இப்படி ஒரு முயற்சி மேற்கொண்டுள்ளதாக கூறியிருக்கிறார்.

Advertisement

2012ஆம் ஆண்டு டெல்லியில் 23 வயது மாணவி பேருந்தில் கொடுமையாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு பின்னர் தான் இப்படியான எண்ணங்கள் அவருக்கு தோன்றியது. எனவே 365 நாட்கள் செல்ல வேண்டும் என்ற யோசனை அவருக்கு வந்ததால் டேட்டிங் செல்லும் போது உங்களை மற்ற பாலினத்தின் இடத்தில் வைத்துப்பாருங்கள், அவர்களின் பிரச்சனைகளை நீங்கள் இன்னும் நன்றாக புரிந்துகொள்வீர்கள் என்பதுதான் என்று அவரின் டேட்டுக்கான குறிக்கோளை கூறியுள்ளார்.

Advertisement