சமூக வலைத்தளத்தில் தனுஷின் உடையை கிண்டல் ரசிகர்கள்..! புகைப்படம் உள்ளே

0
1371
Dhanush Actor
- Advertisement -

சினிமாவில் நடிகைகள் தான் பொது நிகழ்ச்சிகளுக்கு வித்யாசமான ஆடைகளில் சென்று அடிக்கடி ரசிகர்களின் விமர்சனங்களில் சிக்கி விடுகின்றனர். ஆனால், தேசிய விருதுபெற்ற நடிகர் தனுஷ் சமீபத்தில் நடந்த ஒரு விழாவிற்கு வித்யாசமான ஆடையில் சென்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

Dhanush

நடிகர் தனுஷ், தமிழில் துள்ளுகுவதோ இளமை என்ற படத்தில் அறிமுகமான போது இவரெல்லாம் ஒரு ஹீரோவா என்று பலரும் கிண்டல் செய்தனர். ஆனால் தனது அபார நடிப்பு திறமையால் தற்போது தமிழ் சினிமாவையும் தாண்டி ஹிந்தி, ஹாலிவுட் என்று கொடிகட்டி பறக்கிறார்.

- Advertisement -

நடிகர் தனுஷ், தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் “வட சென்னை ” என்ற படத்தில் நடித்த வருகிறார். பிரபல ஹாலிவுட் இயக்குனர் கென் ஸ்காட் இயக்கியுள்ள ” தி எக்ஸ்ட்ராடினரி ஜார்னி ஆஃப் பகீர் ” என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஆங்கிலம் மற்றும் பிரெஞ் மொழிகளில் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட உள்ளனர். இதற்காக சமீபத்தில் அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்றிருந்த தனுஷ் மிக வித்தியாசமான ஆடையில் சென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement