பல விருதுகளை வென்ற தனுஷின் ‘பக்கிரி’ படத்தின் தமிழ் ட்ரைலர் இதோ.!

0
523
Pakkiri

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் தனுஷ். தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட் , ஹாலிவுட் வரை தனது திறமையை நிரூபித்துள்ளார். மேலும், பாடகராகவும், கவிஞ்சராகவும் தனது திறமையை நிரூபித்துள்ளார் தனுஷ்.

நடிகர் தனுஷ் முதல்முறையாக நடித்த ஹாலிவுட் திரைப்படம் தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர். கென் ஸ்காட் இயக்கத்தில் இந்தியா, பிரான்ஸ், இத்தாலி, லிபியா என நான்கு நாடுகளில் படமாக்கப்பட்ட இந்த திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது. தற்போது இந்த படம் தமிழிலும் வெளியாக இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் படத்தின் டிரைலரை இன்று வெளியிட இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்கள், அதேபோல் தற்போது பக்கிரி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ஹாலிவுட்டை போல தமிழும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.


-விளம்பரம்-

Advertisement