4 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்த DNA கூட்டணி. குஷியில் ரசிகர்கள்.

0
924

தமிழ் சினிமாவில் இசையில் ராக் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் அனிருத் ரவிச்சந்திரன். தன்னுடைய இளம் வயதிலேயே இசையின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். இவர் இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என பன்முகங்களை கொண்டு உள்ளார். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடங்கி சினிமாவில் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இசை அமைத்து உள்ளார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் “தர்பார்” படத்திற்கு இவர் தான் இசை அமைத்து உள்ளார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது.

- Advertisement -

அது மட்டும் இல்லாமல் அனிருத் அவர்கள் உலக நாயகன் கமலஹாசனின் ‘இந்தியன் 2’ படத்திற்கும், தளபதி விஜயின் ‘தளபதி 64’ படத்திற்கும் இசையமைத்து வருகிறார். இப்படி தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என்று பல்வேறு ஹீரோக்களுக்கு இசை அமைத்தாலும். அனிருத்தை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தது என்னவோ தனுஷ் தான். கடந்த 2012 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையும் பாருங்க : உங்களுக்கு நீதி கிடைக்க வாழ்த்துகிறோம். ஹீரோ படம் திருட்டு கதை என்று உறுதி யானது. பாக்கியராஜ் கடிதம்.

அதிலும் இந்த படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி பாடல் இந்தியா முழுவதும் பிரபலமடைந்து மாபெரும் ஹிட் அடித்தது. இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் மற்றும் அனிருத் இருவரும் இணைந்து வேலையில்லா பட்டதாரி, மாரி போன்ற படங்களில் இணைந்து பணியாற்றினாரகள். மேலும், இந்த கூட்டணிக்கு DNA என்ற சிறப்பு பெயரும் இருக்கிறது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக இவர்கள் இருவரும் இணைந்து வேலை செய்யாமல் இருந்து வந்தனர். மேலும், இவர்கள் இருவருக்குள்ளும் எதாவது பிரச்னையா என்றும் பேசப்பட்டு வந்தது

-விளம்பரம்-

இந்த நிலையில் 4 ஆண்டுகள் கழித்து தனுஷ் படத்தில் இணைந்துள்ளார் அனிருத். ஆம், இயக்குனர் செந்தில் குமார் இயக்கத்தில் நடிகர் தனுஷ் ‘பட்டாஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு விவேக் மேர்வின் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியான நிலையில், இந்த படத்தின் மூன்றாவது பாடலை அனிருத் பாடியுள்ளார் என்ற அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.4 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்த DNA கூட்டணியால் ரசிகர்கள் குஷியாகியுள்ளார்கள்.

Advertisement