தன் மகன்களுடன் இணைந்து டீமாக கிரிக்கெட் விளையாடிய தனுஷ் – வைரல் புகைப்படம்.

0
195
dhanush
- Advertisement -

தனது மகன்களுடன் தனுஷ் கிரிக்கெட் விளையாடிய புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தனுஷ். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் தனுஷ் நடித்த மாறன் திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருந்தது. இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் மாளவிகா மோகனன், சமுத்திரகனி, ஸ்மிருதி வெங்கட் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. அதற்கு பின் தனுஷ் அவர்கள் நானே வருவேன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். கலைப்புலி எஸ் தாணு உடைய வி கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்து இருக்கிறது. செல்வராகவன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் இசையமைத்து இருக்கிறார்.

இதையும் பாருங்க : பிரபல இயக்குனரின் முன்னாள் மனைவியுடன் Sp சரணுக்கு மூன்றாம் திருமணமா ? Vjs பட நடிகை போட்ட கமன்ட்.

- Advertisement -

தனுஷ் நடிக்கும் படங்கள்:

இப்படத்தின் படப்பிடிப்பை முடிந்த நிலையில் படக்குழு அடுத்த கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது. கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தனுஷ் அவர்கள் திருச்சிற்றம்பலம், வாத்தி, sir போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதேபோல் தனுஷ் நடித்த ஹாலிவுட் படம் தி கிரேட் மேன். இந்த படம் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் ஜூலை 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

மாதேஸ்வரன்-தனுஷ் கூட்டணி:

இதன் பின்னர் ஜூலை 22 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியிடப்படுகிறது. இந்த படத்தில் தனுஷ் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். அதனை தொடர்நது இயக்குனர் மாதேஸ்வரன்-தனுஷ் கூட்டணியில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படம் உருவாக இருக்கிறது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகனிடம் பேசப்பட்டு இருந்தது. பின் அவரின் கால்சீட் கிடைக்காத காரணத்தினால் இந்த படத்தில் நடிகை கீர்த்தி செட்டியை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவு:

இந்நிலையில் தனுஷ் தனது மகன்களுடன் விளையாடி இருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது ஐஸ்வர்யாவுடன் 18 வருட வாழ்க்கையை முடித்து உள்ளதாக தனுஷ் அறிக்கை வெளியிட்டு இருந்தார்கள். இது அனைவருக்குமே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இது குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்தது. அதற்கு இருவருமே விளக்கம் கொடுத்து இருந்தார்கள். மேலும், பிரிவிற்கு பின் இருவரும் தங்களின் கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

மகன்களுடன் கிரிக்கெட் விளையாடிய தனுஷ்:

அதேபோல் விவாகரத்து பெற்ற பிறகு தனுஷ் தனது மகன்களுடன் அதிக நேரம் செலவிட்டு வருகிறார். சமீபத்தில் தனது மகன்களுடன் இணைந்து தனுஷ் கிரிக்கெட் விளையாடியிருக்கிறார். அப்போது விளையாடி அனைவரும் மொத்தமாக புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். அதில் தனுஷ் தனது இரண்டாவது மகனை தோளில் சுமந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement