பிரபல இயக்குனரின் முன்னாள் மனைவியுடன் Sp சரணுக்கு மூன்றாம் திருமணமா ? Vjs பட நடிகை போட்ட கமன்ட்.

0
625
spcharan
- Advertisement -

மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பியின் மகனும் நடிகர் மற்றும் பாடகருமான எஸ் பி சரணுக்கு பிரபல இயக்குனரின் முன்னாள் மனைவியுடன் விரைவில் மூன்றாம் திருமணம் நடைபெற இருப்பதாக சமூக வலைதளத்தில் பேச்சுக்கள் கிளம்பி இருக்கிறது. பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பியின் மகன் சரண் தமிழில் சென்னை 28, சரோஜா போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும், அதிகாரம் என்ற வெப் தொடரையும் இயக்கி இருக்கிறார். தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.

-விளம்பரம்-

எஸ் பி சரண் ஏற்கனவே இரண்டு விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு கடந்த 1998 ஆம் ஆண்டு பிஜோய் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. பின்னர் இவர்கள் 2008 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டனர். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் இருகின்றனர். முதல் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த சரண் கடந்த 2012 ஆம் ஆண்டு அபர்ணா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

- Advertisement -

எஸ் பி சரண் முன்னாள் மனைவிகள் :

பின்னர் அவரையும் பிரிந்துவிட்டார். இப்படி ஒரு நிலையில் சரணுக்கு மூன்றாம் திருமணம் நடைபெற இருக்கிறது என்ற தகவல் சமூக வலைதளத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. அதுவும் செல்வராகவனின் முன்னாள் மனைவியயும் நடிகையுமான சோனியா அகர்வாலை தான் sp சரண் திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்ற கிசு கிசு கிளம்பி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே சமீபத்தில் சரண, சோனியா அகர்வாலுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

சோனியா அகர்வாலுடன் திருமணமா :

அதில் ‘ஒரு புதிய விஷயம் தயாராகிக்கொண்டு இருக்கிறது’ என்று பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் சரணுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஆண்டவன் கட்டளை, சூரரை போற்று என்று பல படங்களில் நடித்த நடிகை வினோதினி , சரணின் இந்த பதிவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.

-விளம்பரம்-

ரசிகர்கள் வாழ்த்து :

இதை பார்த்த ரசிகர்கள் பலரும் சரண் மற்றும் சோனியா அகர்வால் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்களா என்று வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். நடிகை சோனியா அகர்வால் கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை 2010 வரை மட்டுமே நீடித்தது. பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பரஸ்பரம் பேசி விவகாரத்து பெற்றுக் கொண்டனர்.

செல்வராகவன் சோனியா அகர்வால் :

இவருக்கு இருந்த குடிப்பழக்கத்தால் தான் இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்றும் கூறப்பட்டது. தன் விவாகரத்து குறித்து பேசிய சோனியா அகர்வால் ‘காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை என செல்வராகவனுடன் இணைந்து தொடர்ந்து படங்களில் நடித்தேன். அப்போது அவரின் ஹார்ட் வொர்க் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.பின் இருவரும் காதலிக்க ஆரம்பித்தப் பிறகு திருமணமும் செய்து கொண்டாம். ஒரு சில காரணங்களால் இருவரும் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. திருமணம் செய்து கொள்ளும் போது மிகவும் சந்தோஷமாக இருந்தது. அதே போல விவாகரத்து செய்யும் போதும் கொஞ்சம் மனவலி உடனேயே இருவரும் பிரிந்தோம் என்று கூறி இருந்தார்.

Advertisement