காஜல் மட்டுமல்ல இந்த நடிகையும் பொல்லாதவன் படத்திற்காக தனுஷுடன் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் பாருங்க.

0
6502
dhanush
- Advertisement -

சினிமாவில் வரும் ஒரு சில விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் குறுகிய காலத்திலேயே பிரபலமடைந்துவிடும். அந்த வகையில் சினிமாவில் வந்த எந்தனையோ பைக்குகள் ரசிகர்கள் மத்தியில் ஒரு Craze-ஐ ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் பொல்லாதவன் படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்தது பல்சர் பைக். தென்னிந்திய தமிழ் சினிமா திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டு வருபவர் நடிகர் தனுஷ். இவர் தமிழ் சினிமா உலகிற்கு ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் நடிகர் தனுஷ் அவர்கள் “காதல் கொண்டேன், திருடா திருடி, பொல்லாதவன்,ஆடுகளம், விஐபி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார்.

-விளம்பரம்-

தனுஷ் எத்தனையோ இயக்குனர்களுடன் பணியாற்றி இருந்தாலும் தனுசுக்கு தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடம் ஏற்பட ஒரு முக்கிய காரணம் இயக்குனர் வெற்றி மாறன் தான். தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் இதுவரை வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை போன்ற மூன்று படங்களும் சூப்பர் ஹிட் தான். அதே போல வெற்றிமாறன் இயக்குனராக அறிமுகமான படம் தனுஷ்ஷின் பொல்லாதவன் திரைப்படம் மூலம் தான்.

இதையும் பாருங்க : 37 ஆண்டுக்கு பின் தன் படத்தில் நடித்த சிறுவர்களை சந்தித்து எடுத்த புகைப்படத்தை பதிவிட்ட நதியா. (அந்த பசங்க வயசான மாதிரி ஆகிட்டாங்க, ஆனா நதியா)

- Advertisement -

2007 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் பை சைக்கிள் தீவ்ஸ் என்ற இத்தாலிய திரைப்படத்தின் தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக குத்து ரம்யா நடித்து இருந்தார். ஆனால், இவருக்கு முன்பாகவே இந்த படத்தில் நடிப்பதற்கு காஜல் அகர்வால் மற்றும் பூனம் பாஜ்வா ஆகிய இருவருக்கும் தனுஷுடன் டெஸ்ட் ஷூட் எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த இரண்டு நடிகைகளும் வெற்றிமாறனுக்கு திருப்தி அளிக்கவில்லை. பின்னர் தான் இந்த படத்தில் குத்து ரம்யாவை தேர்வு செய்தார். அதே போல இந்த படத்தில் பல்சர் பைக் வைத்து தான் கதையே நகரும். ஆனால், உண்மையில் இந்த படத்தில் ஆரம்பத்தில் Aache பைக் தான் பயன்டுத்துவதாக இருந்தது. அதனையும் வெற்றி மாறன் மாற்றிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement