37 ஆண்டுக்கு பின் தன் படத்தில் நடித்த சிறுவர்களை சந்தித்து எடுத்த புகைப்படத்தை பதிவிட்ட நதியா. (அந்த பசங்க வயசான மாதிரி ஆகிட்டாங்க, ஆனா நதியா)

0
76682
nathiya
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக கொடி கட்டி பறந்தவர் நடிகை நதியா. இவரது உண்மையான பெயர் ஸரீனா மொய்டு. இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில் தான். இவர் மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவுக்கு அறிமுகமானர். பின் இவர் 1985 ஆம் ஆண்டு வெளியான பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதற்கு பிறகு உயிரே உனக்காக, நிலவே மலரே, சின்ன தம்பி பெரிய தம்பி, பாடு நிலாவே, ராஜாதி ராஜா உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் கொண்டவர் நடிகை நதியா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் 1988 ஆம் ஆண்டு சிரிஷ் காட்போலே என்பவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டார்.இவர்களுக்கு சனம், ஜனா என்ற இரண்டு மகள்கள் உள்ளார்கள். பின் நடிகை நதியா அவர்கள் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்ட இவர் M குமரன் S/o மகாலட்சுமி என்ற படத்தின் மூலம் மீண்டும் இவர் தமிழ் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் தமிழ்,தெலுங்கு ஆகிய மொழி படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

நதியாவை ஏன் எல்லாரும் எவர் கிறீன் நடிகை என்று அளிக்கிறார்கள் என்பதற்கு இந்த ஒரு புகைப்படம் போதும். நடிகை நதியா மற்றும் மோகன் லால் நடிப்பில் 1984 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் ‘Nokkethadhoorathu Kannum Nattu‘ இதே படம் தான் தமிழில் ‘பூவே பூச்சூடவா’ என்ற பெயரில் 1985 ஆம் ஆண்டும் வெளியானது. இப்படி ஒரு நிலையில் Nokkethadhoorathu Kannum Nattu படத்தில் நடித்த சிறுவர்களின் தற்போதைய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் நிதியா.

Nokkethadhoorathu Kannum Nattu வெளியாகி 37 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த படத்தில் சில சிறுவர்கள் நடித்து இருப்பார்கள். இந்த நிலையில் அந்த படத்தில் நடித்த சிறுவர்களுடன் தற்போது நதியா புகைப்படம் எடுத்துள்ளார். அதில் சிறுவர்களாக நடித்த நபர்கள் வயதாகி கொஞ்சம் காணப்படுகின்றனர். ஆனால், அவர்களை விட நதியா இன்னமும் இளமையாக இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement