இதற்கு முன் இதை எங்கே பார்த்தேன்- விவாகரத்துக்கு அறிவிப்பிற்கு பின் தன் மகனுன் சேர்ந்து தனுஷ் போட்டு முதல் பதிவு படு வைரல்.

0
740
Dhanush
- Advertisement -

சற்றுமுன் தனுஷ் தன்னுடைய இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக தனுஷ் திகழ்ந்து வருகிறார். தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் பல வெற்றிப் படங்களை கொடுத்து உள்ளார். மேலும், தனுஷ் அவர்கள் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல துறைகளில் சாதித்து வருகிறார்.

-விளம்பரம்-

அதிலும் சமீப காலமாகவே இவர் கோலிவுட்,டோலிவுட்,பாலிவுட், ஹாலிவூட் என அணைத்து மொழிகளிலும் கால் தடம் பதித்து வருகிறார். இதனிடையே நடிகர் தனுஷ் அவர்கள் 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் முத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனுஷின் மனைவியான ஐஸ்வர்யாவும் இயக்குனர் ஆவார். மேலும், இவர்களுக்கு யாத்ரா , லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளார்கள். இப்படி ஒரு நிலையில் இருவரும் தாங்கள் பிரிவதாக சமூக வலைதள பக்கத்தில் அறிவித்து இருப்பது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது.

- Advertisement -

தனுஷ் வெளியிட்டு இருந்த அறிக்கை:

இதுகுறித்து தனுஷ் வெளியிட்டு இருந்த அறிக்கை, ’18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, அனுசரிப்பு என இருந்தது. இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஒரு கட்டத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரமாக முடிவு செய்துள்ளோம். மேலும், இருவரும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்து இருந்தார்.

தனுஷின் விகாரத்துக்கு ரசிகர்களின் பதிவு:

இவர்களின் இந்த முடிவை தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பல விதமான கருத்துக்களை போட்டு வருகின்றனர். அதோடு தனுஷ்- ஐஸ்வர்யா இருவருக்கும் நடுவில் என்ன நடந்தது? என்று தெரியாமல் பலரும் பல விதமாக வதந்திகளை பரப்பி வருகிறார்கள். மேலும், பிரிய போகிறோம் என்று அறிவித்த பிறகு இருவரும் தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இப்படி தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து அறிவித்ததில் இருந்து குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என பலரும் அவர்களை சேர்த்து வைக்க பல முயற்சி செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

ஐஸ்வர்யா – தனுஷ் விவாகரத்து விவகாரம்:

சமீபத்தில் கூட ஐஸ்வர்யாவை விவாகரத்துச் செய்வதில் தனுஷ் மனம் மாறி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. ஐஸ்வர்யாவை தனுஷ் பிரிந்தாலும் முறையாக அவரை விவாகரத்து செய்யும் எண்ணம் இல்லை என்று தனுஷ் கூறியதாகச் சொல்லப்படுகிறது. குழந்தைகளுக்காக இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்று இருவருக்கும் அட்வைஸ் செய்து வருகின்றனர். இதனால் இவர்கள் இருவரும் மீண்டும் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தனுஷ் தன்னுடைய இன்ஸ்டாவில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருக்கிறார். தனுஷ் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார்.

இன்ஸ்டாவில் தனுஷ் பதிவிட்ட புகைப்படம்:

தனுஷுக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் 4 மில்லியன் பாலோவர்ஸ் இருக்கிறார்கள். இதனாலேயே இவர் பதிவு செய்த புகைப்படங்கள் எல்லாம் ஜெட் வேகத்தில் வைரலாகும். இந்த நிலையில் சற்று முன் தனுஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் மகனுடன் இருக்கும் மாஸ் புகைப்படத்தை பதிவிட்டு ‘இதற்கு முன் இதை நான் எங்கேயோ பார்த்தேன் என்று கேள்விக்குறியுடன் பதிவிட்டு இருக்கிறார். மேலும், இவர் பதிவு செய்த 45 நிமிடங்கள் ஆன நிலையில் சுமார் 3 லட்சம் லைக்குகளை பெற்று உள்ளது. இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் கமெண்ட் போட்டு வருகிறார்கள். மேலும், இந்த புகைப்படம் ஊட்டியில் எடுக்கப்பட்டது. அங்கு தான் தனுஷின் நானே வருவேன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement