‘அன்னிக்கு நான் இதே கெட்டப்ல நடிச்ச போது’ விருதை வாங்கிவிட்டு கெத்தாக பேசிய தனுஷ்.

0
574
Dhanush
- Advertisement -

நடிகர் தனுஷிற்கு யூத் ஐகான் விருது கிடைத்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கோலிவுட்டில் மிக பிரபலமான முன்னணி நடிகராக திகழ்பவர் தனுஷ். இவர் சினிமா உலகில் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல துறைகளில் தன்னுடைய திறமையைகாண்பித்து வருகிறார்.

-விளம்பரம்-

சமீப காலமாக இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த படம் திருச்சிற்றம்பலம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனை அடுத்து இவர் நானே வருவேன், மாறன் போன்ற படங்களில் நடித்து இருந்தார். இந்த படங்கள் எல்லாம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. மேலும், இவர் பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.

- Advertisement -

இதனை அடுத்து சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாக இருந்த படம் வாதி வாத்தி”. இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கி இருக்கிறார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் நடிகை சம்யுக்தா தனுஷுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். இவர்களுடன் படத்தில் மொட்டை ராஜேந்திரன், சமுத்திரக்கனி, கென் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.

தனுஷ் நடிக்கும் படங்கள்:

அது மட்டும் இல்லாமல் இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இதனை தொடர்ந்து தனுஷ் அவர்கள் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். தற்போது இந்த படத்திற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஒன்றில் தனுஷ் நடிக்க இருக்கிறார்.

-விளம்பரம்-

யூத் ஐகான் விருது:

இப்படி தொடர்ந்து பல படங்களில் தனுஷ் பிசியாக கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் தனுசுக்கு யூத் ஐகான் விருது கிடைத்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற தக்ஷின் மாநாட்டில் தனுஷ் கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் அவருக்கு யூத் ஐகான் என்ற விருது வழங்கப்பட்டிருக்கிறது. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இந்த விருதை தனுஷிற்கு வழங்கி இருக்கிறார்.

தனுஷ் கூறியது:

மேலும், விருது வாங்கிய பிறகு நடிகர் தனுஷ் கூறியிருப்பது, என்னுடைய 40 வயதில் நான் யூத் ஐகான் விருது வாங்குவேன் என்று சத்தியமாக எதிர்பார்க்கவே இல்லை. இன்னும் நிறைய சாதிக்க வேண்டியது இருக்கு. சினிமாவுக்கு வந்த புதிதில் நான் இது போன்ற தோற்றத்தில் வந்த போது பலரும் ஏற்க மறுத்தனர். ஆனால், தற்போது கொண்டாடுகிறார்கள் என்று பேசி இருந்தார். நடிகர் தனுஷ் 2007 ஆம் ஆண்டு பரட்டை என்கிற அழகு சுந்தரம் படத்தில் தாடி மற்றும் குடிமியுடன் நடித்தது பெரும் கேலிக்கு ஆனது. அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு மயக்கம் என்ன படத்தின் கிளைமேக்ஸ்ஸில் தான் இதே போல தோற்றத்தில் வருவார். அப்போது அந்த காட்சி பெரும் கேலிக்கு உள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement