தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகரும், இயக்குனரும் ஆனவர் விசு. விசு அவர்கள் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா, தொகுப்பாளர் என பல முகங்கள் கொண்டவர். இவர் முழு பெயர் எம் ஆர் விஸ்வநாதன். இவர் முதன் முதலில் இயக்குனர் பாலச்சந்திரனிடம் தான் துணை இயக்குனராக பணிபுரிந்தார். அப்போதே இவர் திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். பின் ரஜினியின் தில்லு முல்லு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
ரஜினிகாந்த் நடிப்பில் 1981ஆம் ஆண்டு திரைக்கு வந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் நெற்றிக்கண். இந்த படத்தில் லட்சுமி, சரிதா, மேனகா, விஜயசாந்தி, கவுண்டமணி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தை எஸ்பி முத்துராமன் இயக்கியிருந்தார். பாலச்சந்திரன் கவிதாலயா பட நிறுவனம் தயாரித்திருந்தது. விசு இந்த படத்திற்கு கதை எழுதி இருந்தார். தற்போது நடிகர் தனுஷ் அவர்கள் நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்ய இருப்பதாகவும், ரஜினிகாந்த் கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பதாகவும் கூறி உள்ளார். ஆனால், நெற்றிக்கண் படத்தின் ரீமேக்கிற்கு தனக்கு அதற்கான இழப்பீடு எதுவும் குடுக்கவில்லை என்றும் கூறி இருந்தார்.
இதையும் பாருங்க : அடிமையாக, உணவு,உடையின்றி சம்பளம் இல்லாமல் வேலை செய்கிறேன். நடிகர் நகுல் பதிவு.
இந்த படத்தை ரீ மேக் செய்ய வேண்டும் என்றால் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயாவிடம் இருந்து உரிமம் வாங்கினால் மட்டும் போதாது. இந்த படத்தின் கதாசிரியரான என்னிடம் வந்து கேட்பது சரியாக இருக்கும். என்னிடம் உரிமை பெறாமல் நெற்றிக்கண் படத்தை தனுஷ் ரீமேக் செய்தால் தனுஷ் மீது கோர்ட்டில் நான் வழக்கு தொடருவேன் என்று கோபமாக கூறி இருந்தார். ஆனால், இதுகுறித்து அதிகாரபூர்வ அறிக்கை வெளியிட்ட கவிதாலயா நிறுவனம், நெற்றிக்கண் திரைப்படத்தின் ரீ 0-மேக் உரிமையை யாரும் வாங்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தது.
இந்த நிலையில் விசுவிற்கு நடிகர் தனுஷ் போன் செய்து இதுகுறித்து விளக்கமளித்தாக விசு தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, ‘அங்கிள்.. உங்களை எந்த இடத்தில் வைத்திருக்கிறோம் என்று உங்களுக்குத் தெரியாது. எங்களது இதயத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். ஏனென்றால் எங்க அப்பா 1982ல் இருந்து உங்களிடம் உதவி இயக்குனராக வேலை செய்தார். பல படங்களில் வேலை செய்திருக்கிறார்.
உங்களுக்கு வந்த செய்தி உண்மையான செய்தி அல்ல. பத்திரிகை நிருபர் ஒருவர் ரஜினிகாந்த் நடித்த படங்களில் ஏதாவது ஒரு படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று நினைத்தால், அது எந்தப் படம் என்று கேட்டார். அதற்கு தான் நான் ‘நெற்றிக்கண்’ என்று பதிலளித்தேன். அது எனக்கு ரொம்பப் பிடித்த படம். மேலும், அந்த படத்தின் ரீ மேக் உரிமையை யாரிடமும் நான் பெறவில்லை. எனவே, அப்படி வந்தது தவறான தகவல் என்று தனுஷ் கூறியதாக விசு கூறியுள்ளார்.