தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ். இவர் சினிமா உலகில் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், எழுத்தாளர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார். சமீப காலமாக இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் தனுஷ் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளிவந்த படம் இட்லி கடை.

இந்த படத்தில் அருண் விஜய், ராஜ்கிரன், சத்யராஜ், பார்த்திபன், ஷாலினி பாண்டே, நித்யா மேனன் உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும், இவர் தமிழில் மட்டும் இல்லாமல் ஹிந்தியிலும் கலக்கி கொண்டு வருகிறார். தற்போது நடிகர் தனுஷின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கர. இது தனுஷ் உடைய 54வது படம். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை விக்னேஷ் ராஜா இயக்கி இருக்கிறார். இந்த படம் ஏப்ரல் 30-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
தனுஷ் குறித்த தகவல்:
இந்த நிலையில் இந்த படத்தினுடைய ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்திருந்தது. அப்போது விழாவில் பேசிய தனுஷ், என்னுடைய திரைப்படத்தில் நான் யாரிடமும் வாய்ப்பு கேட்டதே கிடையாது. ஆனால், சிறந்த இயக்குனர்கள் என்னை தேடி வந்து வாய்ப்பு அளித்திருக்கிறார்கள். வேலையில்லா பட்டதாரி, திருச்சிற்றம்பலம் படங்களுக்கும் படத்தினுடைய தலைப்பு தொடர்பாக விமர்சனங்களும் பிரச்சனைகளும் வந்தது. ஆனால், அந்த படங்கள் எல்லாம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

விழாவில் தனுஷ் பேசியது:
அதே போல் தான் கர படத்தினுடைய தலைப்புக்கும் பிரச்சனை வந்தது. கண்டிப்பாக இந்த படமுமே பெரிய வெற்றியடையும் என்று நம்புகிறேன். அதேபோல் என்னுடைய போயஸ் கார்டன் வீடு குறித்து நிறைய மீம்ஸ்கள் இணையத்தில் வந்தது.இதனை நான் வேடிக்கையாகவும் பொழுதுபோக்காகவும் தான் பார்க்கிறேன். மக்களை மகிழ்விப்பதே என்னுடைய வேலை என்பதால் நான் மீம்ஸ்களை எல்லாம் பாசிட்டிவாக எடுத்துக் கொண்டேன்.

விமர்சனங்களுக்கு பதிலடி:
ஒருமுறை விமான நிலைய ஊழியர் ஒருவர், என்னிடம் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கு கேட்டார். அப்போது அவர், நான் யாரிடமும் புகைப்படம் கேட்க மாட்டேன். ஆனால், போயஸ் கார்டன் வீடு பற்றி நீங்கள் பேசிய விஷயம் என்னுடைய மகனுக்கு இன்ஸ்பிரேஷன் ஆக இருந்தது என்று சொன்னார். இதை ஏன் சொல்கிறேன் என்றால் நான் சொன்னதை மோட்டிவேஷனலாக பார்த்தால் மோட்டிவேஷன், என்டர்டெயின்மென்டாக பார்த்தால் என்டர்டெயின்மென்ட். எதனை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பது நம்முடைய கையில் தான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.






