தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தனுஷ். தற்போது இவருடைய நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் கர. இந்த படத்தை விக்னேஷ் ராஜா இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் மம்தா பைஜி, கே.எஸ்.ரவிக்குமார், ஜெயராம், சுராஜ், கருணாஸ் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:
படத்தில் ஹீரோ தனுஷ் ஒரு திருடன். தனுஷ்- பிரித்திவி இரண்டு பேருமே சேர்ந்து இரண்டு எம்எல்ஏ வீட்டை திருட செல்கிறார்கள். அதில் தனுஷ் மட்டும் மாட்டிக் கொள்கிறார். அவர் மாட்டிக்கொண்ட போலீஸ் ஸ்டேஷனில் உயர் அதிகாரியாக சுராஜ் இருக்கிறார். சுராஜ், தனுஷின் மீது நிறைய கேசுகளை போடுகிறார்.
தனக்கு பப்ளிசிட்டி கிடைக்க வேண்டும் என்று தான் இதெல்லாம் செய்கிறார். இதை அறிந்த தனுஷ், சுராஜை அடித்து விட்டு அங்கிருந்து தப்பித்து ரேணிகுண்டாவிற்கு செல்கிறார்.
அதற்கு பிறகு மம்தா உடன் சேர்ந்து தனுஷ் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். ஆனால், பண கஷ்டம் அவரை
விட்டு வைக்கவில்லை. இதனால் தனுஷ் மெஸ் ஒன்றை ஆரம்பிக்க நினைக்கிறார். இதனால் தனுஷ், தன்னுடைய சொந்த ஊருக்கு வந்து தன்னுடைய அப்பா ரவிக்குமாருடைய நிலத்தை விற்று பணத்தை
ஏற்பாடு செய்யலாம் என்று நினைக்கிறார். சொந்த ஊருக்கு வந்த பிறகு தான் அவருடைய நிலத்தை வங்கியில் அடமானம் வைத்து தான் டிராக்டர் வாங்கி இருக்கிறார் என்பதை தனுஷ் தெரிந்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் வாங்கிய கடனுக்காக நிலத்தை பேங்க் ஜப்தி செய்கிறது.

ரவிக்குமாறும் இறந்து போகிறார். தன்னுடைய அப்பாவை தன்னுடைய நிலத்தில் அடக்கம் செய்ய வங்கி ஒத்து கொள்ளவில்லை. இப்படி எல்லா திசைகளிலுமே பிரச்சனை மேல் பிரச்சனை தனுசுக்கு வருகிறது. அதற்கு பிறகு தனுஷ் எடுக்கும் முடிவுகள் என்ன? பிரச்சனைகள் கடந்து தனுஷ் வந்தாரா? போலீஸ் இடம் மீண்டும் சிக்கினாரா? என்பதுதான் படத்தினுடைய மீதி கதை. படத்தில் தனுஷ் கரசாமியாக நடித்திருக்கிறார் என்பதை விட வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லலாம். சின்ன வயதில் வீட்டை விட்டு ஓடி போய் பிழைப்புக்காக கஷ்டப்பட்டு சம்பாதித்து வாழ்க்கையில் ஜெயிக்க முடியாமல் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு அப்பாவியான கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்திருக்கிறார்.
வாழ்க்கையில் ஜெயிக்க அவர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளுமே பார்வையாளரை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது. கே எஸ் ரவிக்குமார், கருணாஸ், மம்தா எல்லோருமே தங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். சுராஜ் போலீஸ் கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார் என்றே சொல்லலாம். கதைக்களம் அருமையாக இருக்கிறது. முதல் பாதி எமோஷனல், பொறுமையாக செல்கிறது. தனுஷ் திருடன் என்பதால் கொஞ்சம் ரசிகர்களுக்கு வருத்தம். இருந்தாலுமே இரண்டாம் பாதியில் இயக்குனர் பட்டையை கிளப்பி இருக்கிறார்.
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள். ஒரு விவசாயி எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார் என்பதை இயக்குனர் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி வைக்கிறார். ஜிவி பிரகாஷ் உடைய பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலத்தை கொடுத்திருக்கிறது. எடிட்டிங், ஒளிப்பதிவு எல்லாம் ஓகே. மொத்தத்தில் குடும்பத்துடன் எல்லோரும் சென்று பார்க்கும் படமாக தான் கர இருக்கிறது.

நிறை:
தனுஷ் நடிப்பு
நடிகர்கள் எல்லோருமே தங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்
இரண்டாம் பாதி அருமையாக இருக்கிறது
விவசாயிகளின் நிலமை
பின்னணி இசை படத்திற்கு பக்கபலம்
குறை:
முதல் பாதி பொறுமையாக செல்கிறது
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
சில இடங்களில் விறுவிறுப்பை கொடுத்திருக்கலாம்
மொத்தத்தில் கர - தனி மனித போராட்டம்






