காலா படத்தை பார்த்த பிரபல நடிகர்..? அவரிடம் இருந்து வந்த முதல் விமர்சனம்.! அதிரடி அப்டேட்

0
568
kaala

இயக்குனர் ரஞ்சித் மற்றும் சூப்பர் ஸ்டார் கூட்டணியில் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் “காலா ” இந்த படத்தின் டீசர் வெளியான காலகட்டத்தில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் ஒரு ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது.

kaala

ரஜினியின் மருமகன் நடிகர் தனுஷ் தயாரித்துள்ள இந்த படத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடல்களை தெறிக்கிவிட்டுள்ளார். அதிலும் குறிப்பாக காலா படத்தில் இடம்பெற்றுள்ள தீம் பாடல் தற்போது ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

சமீபத்தில் இந்த படத்தின் பாடல் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் தனுஷ் “காலா படத்தை நான் பார்த்துவிட்டான் , சூப்பர் ஸ்டார் லோக்கலாக இறங்கி பல நாட்கள் ஆகிவிட்டது. அதை நீங்கள் இந்த படத்தில் பார்ப்பீர்கள் .மேலும் இந்த படம் அவரது ரசிகர்ககளுக்கு ஒரு பெரிய விருந்தாக அமையும்” என்று கூறியுள்ளார்.

dhanush-kaala-audio-launch

காலா படம் அடுத்த மாதம் ஜூன் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில் படத்தை பற்றி தனுஷ் இவ்வாறு கூறியுள்ளது, ரசிகர்கள் மத்தியில் மேலும் சுவாரசியத்தை கூட்டியுள்ளது.