செல்வராகவனை தொடர்ந்து ‘புதுப்பேட்டை 2’ படத்தை உறுதி செய்த தனுஷ்.!

0
1517
Pudupettai-2
- Advertisement -

இயக்குனர் செல்வராகவன், தமிழ் சினிமாவில் இருக்கும் இயக்குனர்களில் வித்தியாசமான கதைகளை எடுக்கும் ஒரு சிலரில் இவரும் ஒருவர். ஆரம்பகாலத்தில் எழுத்தாளராக இருந்த இவர், தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை என்ற படத்தில் கதை ஆசிரியர் பணியாற்றினார். 

-விளம்பரம்-

அதன் பின்னர் தனுஷை வைத்து இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டு காதல் கொண்டேன் படத்தை இயக்கினார் இந்த படம் தனுஷுக்கு ஒரு மிகப்பெரிய துவக்கத்தை கொடுத்தது. அதன் பின்னர் இவர் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற பல படங்கள் மாபெரும் வெற்றி அடைந்தது.

- Advertisement -

அதிலும் இவர், தனுஷை வைத்து எடுத்த ‘புதுப்பேட்டை’ படம் ரசிகர்கள் மத்தியில் அப்போது வரவேற்பைப் பெற தவறவிட்டாலும் இன்றளவும் இப்படம் பேசப்பட்டு வருகிறது. இந்த படம் தற்போதுள்ள ரசிகர்கள் ஆசைப்படுவது என்னவெனில் புதுப்பேட்டை போன்ற படம் தற்போது வந்திருந்தால் அது தனுஷிற்கு மாபெரும் ஹிட் படமாக அமைந்திருக்கும் என்பதுதான். இதனால் புதுப்பேட்டை போன்ற படத்தை எப்போது எடுப்பீர்கள் என்று செல்வராகவனை பலமுறை கேட்டும் வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கேள்வியை நடிகர் தனுஷிடம் சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது புதுப்பேட்டை இரண்டாம் பாகம் குறித்து கேட்கப்பட்டது, நிச்சயமாக புதுப்பேட்டை 2 உருவாக வாய்ப்புகள் உண்டு. புதுப்பேட்டை படத்துக்கென இன்னும் ரசிகர்கள் உண்டு. புதுப்பேட்டை எடுக்க வேண்டுமென்றால் முதல் பாகத்துக்கு ஏற்ப ஒழுங்காக எடுக்க வேண்டும். அது எளிதான வேலையல்ல. புதுப்பேட்டை இரண்டாம் பாகத்துக்குக் கதை எழுதும் பணிகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது என்று குறியுள்ளார்.

-விளம்பரம்-

Advertisement