எதுக்கு சூப்பர் ஸ்டார் மாதிரி Try பண்றீங்க – வாத்தி Audio launchல் தனுஷ் பேசிய பேச்சை கேட்டு விமர்சிக்கும் ரசிகர்கள்.

0
836
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் இவர் நடித்த படங்கள் பல மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வருகிறது. இந்த நிலையில் தனுஷ் சூப்பர் ஸ்டாரின் மக்கள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கின்றனர். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு 18 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா அறிவித்து இருந்தது அனைவரும் அறிந்த ஒன்று.

-விளம்பரம்-

தனுஷ்- ஐஸ்வர்யாவின் இந்த முடிவை தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பல விதமான கருத்துக்களை போட்டு இருந்தார்கள்.மேலும், இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என பலரும் பல முயற்சிகள் செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட ஐஸ்வர்யாவை விவாகரத்துச் செய்வதில் தனுஷ் மனம் மாறி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. அதோடு பிரிய போகிறோம் என்று அறிவித்த பிறகு இருவருமே தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

- Advertisement -

வாத்தி இசைவெளியிட்டு விழா :

இந்நிலையில் வரும் 17 ஆம் தேதி தனுஷ் நடித்த வாத்தி திரைப்படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடந்து முடிந்தது அதில் தனுஷ் பேசியது தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. அவர் கூறியதாவது “நான் ஒரு டியூஷனுக்கு படிக்க சென்றேன். நான் அங்கே சென்றது படிப்பதற்கு அல்ல என்னுடைய காதலியை பார்ப்பதற்காக. நான் அவருடன் நேரம் செலவழிக்கலாம் என்று தான் சென்றிருந்தேன் ஆனால் அந்த டியூஷனின் வாத்தியார் என்னை தொடர்ந்து கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தார். எனக்கு தெரியவில்லை அசிங்கமாகிக்கொண்டே இருந்தது. நான் சரி இது சரிப்பட்டு வராது என்று டியூஷன் செல்வதை நிறுத்திவிட்டேன்.

தனுஷ் குட்டி ஸ்டோரி :

அதற்கு பிறகு நான் டியூஷனுக்கு வெளியில் காத்திருந்தேன். நான் வெளியில் காத்திருப்பது என்னுடைய காதலிக்கு தெரிய வேண்டும் என்று என்னுடைய பைக்கில் உள்ள ஹரனை அடிப்பேன். இதனால் என்னுடைய காதலி தெரிந்து கொள்வார் நான் அவருக்காக வெளியில் காத்திருக்கிறேன் என்று. நான் என்போதெல்லாம் அந்த பக்கம் செல்கிறேனோ அப்போதெல்லாம் ஹாரனை அடித்து சிக்னல் செய்து விட்டு சென்று விடுவேன். இதனால் டியூஷனுக்குள் இருக்கும் என்னுடைய காதலிக்கும் தெரிந்துவிடும் நான் வெளியில் காத்திருக்கிறேன் என்று.

-விளம்பரம்-

வாத்தியார் சொன்னது :

இப்படியே சில நாட்கள் செல்ல அந்த டியூஷனின் வாத்தியார் சுதாரித்துக் கொண்டு நான் வெளியில் இருந்து சிக்னல் கொடுக்கிறார்ன் என்று அவருக்கு தெரிந்து விட்டது. அவர் அப்போது சொல்லியிருக்கிறார் “இப்போ உள்ளே அமர்ந்து எல்லோரும் படிச்சிட்டு இருக்கீங்களே நீங்கல்லாம் பெரிய இடத்திற்கு சென்று விடுவீர்கள். ஆனால் வெளியில் ஹாரன் அடிச்சு சிக்னல் கொடுக்குறா பார் அவ கடைசியா தெருவுல கூத்தாடாதா போறான்னு சொன்னாரா. அவர் எந்த நேரத்தில் சொன்னாரோ நான் கூத்தாடாத தெருவே தமிழ் நாட்டில் இல்லை என்று கூறினார் நடிகர் தனுஷ்.

திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள் :

இந்த நிலையில் தனுஷ் வாத்தி படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் பேசிய வைரலான நிலையில் பலரும் தனுஷ் பேசியதை கலாய்த்து வருகின்றனர். இதில் நெட்டிசன்கள் பலர் என்ன உங்க மாமனார் சூப்பர் ஸ்டார் மாறி ட்ரை பண்டரீங்களா? என்றும், இவர் சொல்வதையே ஒரு கூலி தொழிலாளி சொல்லியிருந்தார் கீழ் தரமாக சொல்லுவார்கள் என்றும், படத்திற்கு படம் இவரு சொல்றமாறி சுத்திட்டு இவரு நமக்கு வந்து அட்வைஸ் பன்றாரு என கடுமையாக விமர்சித்து திட்டி வருகின்றனர்.

Advertisement