3 பாகமாக தனுஷின் வட சென்னை.! வெளிவரப்போகும் படத்தின் கதை இதுதான்..!

0
666
vadachennai

வெற்றி இயக்குனர் வெற்றிமாறன் தனுஷை வைத்து பொல்லாதவன் போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர்கள் இருவரும் இணைந்து வட சென்னை என்ற படத்தை எடுத்துவருகின்றனர். தனுஷ் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் நடிகைகள் ஆண்ட்ரியா,ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர்களும் மற்றும் நடிகர்கள் கிஷோர் ,சமுத்ரகானி கருணாஸ் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

vada chennai

இந்த படம் வட சென்னை மக்களின் 35 வருட வாழ்க்கை வரலாற்றை காட்டுகிறது.இந்த படத்தின் தகவல்கள் வெளிவந்து பல மாதங்கள் ஆன நிலையில் இன்னும் இந்த படத்தை எடுத்து முடித்தார்களா இல்லையா, படம் எப்போது வெளிவரும் என்ற எந்தவித தகவலும் இல்லாமல் இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் தனுஷ் இந்த படத்தை பற்றி பேசுகையில்’விரைவில் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் வரும் ஜுலை மாதம் 28 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும், இந்த படம் மொத்தம் 3 பாகங்களாக உருவாக உள்ளதாம் அதில் தற்போது முதல் பாகம் மட்டும் தயாராகி உள்ளது என்று படகுழுவினர் அறிவித்துள்ளனர். மேலும், இந்த படத்தின் கதையும் வெளியாகியுள்ளது.

vadaachennai

இந்த படத்தில் தனுஷ் ஒரு கேரம் போர்டு வீரராக இருக்கிறாராம். உலக சம்பியனாக வர வேண்டும் என்று நடிகர் தனுஷ் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறாராம். அப்போது அவரது வாழ்க்கையில் ஒரு திடீர் பிரச்சனை ஏற்பட்டு ஒரு கேங்ஸ்டாராக மாறிவிடுகிறாராம்.பின்னர் அவரது வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பது தான் கதையாம். இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த ஆடுகளம், பொல்லாதவன் போன்ற படங்கள் நல்ல வெற்றி படமாக அமைந்தது. எனவே , இவர்கள் கூட்டணியில் விரைவில் வெளியாக இருக்கும் இந்த படமும் ஹிட் அடையும் என்று எதிர்பார்க்கபடுகிறது.