சிவராத்திரியை முன்னிட்டு தனது குடும்பத்துடன் குல தெய்வ கோவிலுக்கு சென்ற தனுஷ்.

0
4317
dhanush

தமிழ் சினிமா உலகில் உள்ள உச்ச நட்சத்திரங்களில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் நடிகர் தனுஷ். “ஒய் திஸ் கொலவெறி” என்ற பாடல் மூலம் இந்த உலகையே திரும்பிப் பார்க்கச் செய்தவர் நடிகர் தனுஷ். சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே தனெக்கென ஒரு பாதையை உருவாக்கியவர். இவர் சினிமா உலகில் நடிகர் மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், உலகில் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல திறமைகளை கொண்டவர். கடந்த ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளி வந்த “அசுரன்” படம் அசுர வசூல் வேட்டையை செய்தது.

இதனைத் தொடர்ந்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படம் நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு வெளி வந்தது. இந்த படமும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் செந்தில் குமார் இயக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த படம் “பட்டாஸ்”. இந்த வருடம் தொடக்கத்திலேயே தனுஷ் அவர்கள் வேற லெவல் மாஸ் காட்டி உள்ளார். தற்போது தனுஷ் அவர்கள் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சுருளி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்து விட்டது. இந்த படம் மே 1 ஆம் தேதி திரையரங்கிற்கு வெளிவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இதனை தொடர்ந்து தற்போது தனுஷ் அவர்கள் மாரி செல்வராஜ் இயக்கத்தில் “கர்ணன்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இது தனுஷின் 41 வது படமாகும். இவர்களுடன் யோகி பாபு. மலையாள நடிகர் லால் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு இந்த படத்தை தயாரிக்கிறார்.
1991 ஆம் ஆண்டு கொடியன்குளம் மணியாச்சி ஜாதி கலவரத்தை மையமாக வைத்து தான் தனுஷ் நடிக்கும் கர்ணன் படம் உருவாக்கப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு தான் தனுஷின் கர்ணன் படத்தை தடை செய்ய வேண்டும் என்று முக்குலத்தோர் புலிப்படை சார்பில் போலீசில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் தெரிந்ததே.

View this post on Instagram

#Dhanush With His Family

A post shared by Behind Talkies (@behindtalkies) on

இந்நிலையில் நேற்று மகா சிவராத்திரி என்பதால் நடிகர் தனுஷ் அவர்கள் தன்னுடைய குடும்பத்துடன் தேனியில் உள்ள தன்னுடைய குலதெய்வ கோவிலான கருப்புசாமி ஆலயத்திற்கு சென்று வழிபாடு நடத்தி உள்ளார்கள். தனுசுடன் அவருடைய மனைவி ஐஸ்வர்யா மற்றும் அவரது மகன்கள் அனைவரும் சென்று உள்ளார்கள். அவர்கள் அனைவரும் கோவிலில் இருக்கிற புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த கர்ணன் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் இந்தியில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். பின் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த நெற்றிக்கண் படத்தை தனுஷ் ரீமேக் செய்து நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement