நெல்லையப்பர் கோவிலில் செய்த நடிகர் தனுஷ் சாமி தரிசனம்..! வைரலாகும் புகைப்படம்

0
51
Actor-Dhanush
- Advertisement -

நடிகர் தனுஷ் தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் “வட சென்னை” படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்தப்படம் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Actor dhanush

இதையடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படப்பிடிப்பு நேற்று முடிந்தது. இரண்டு வருடங்களுக்கும் மேல் தயாரிப்பிலிருந்து வந்த இப்படத்தை வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம்.

- Advertisement -

அத்தோடு நடிகர் தனுஷ் தற்போது “மாறி 2 ” படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் நெல்லை, தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற இருக்கிறது. நேற்று (செப்டம்பர் 4) மாறி 2 படத்தின் படப்பிடிப்புகள் பங்கேற்பதற்கு முன்பாக அதிகாலை 6.30 மணியளவில் நடிகர் தனுஷ்மற்றும் படக்குழுவினர் நெல்லையப்பர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

Dhanush

கோவிலில் வழிபட்டுவிட்டு தென்காசிக்கு புறப்பட்டு சென்று விட்டார் நடிகர் தனுஷ். அதோடு படம் எடுக்க போதும் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து வந்தார். தனுஷின் வருகை அறிந்து அவரை காண பல்வேறு ரசிகர்கள் குவிந்தனர். அவர்களை கட்டுப்படுத்த போலீஸ் பாதுகாப்பும் போடபட்டிருந்தது.

Advertisement