நான் படத்தில் தனுஷ் நடிக்காமல் போனதற்கு முழுக்க முழுக்க காரணம் இது தான் – நான் பட இயக்குனர் பேட்டி.

0
606
naan

தமிழ்சினிமாவில் இருக்கும் எத்தனையோ இசையமைப்பாளர்கள் தற்போது ஹீரோக்களாக நடித்து வருகிறார்கள் விஜய் ஆண்டனி ஜிவி பிரகாஷ் ஹிப் ஹாப் தமிழா ஆதி என்று பல நடிகர்கள் இசையமைப்பாளராக இருந்து ஹீரோக்களாக ஆனவர்கள் தான் ஆனால் ஜிவி பிரகாஷ் மற்றும் ஹிப்ஹாப் ஆதி முன்பாகவே கதாநாயகனாக அவதாரம் எடுத்தவர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இவர் இசையமைக்கும் பாடலில் ஒரு சிறிய கேமியோ ரோலில் தோன்றியிருந்தார்.

- Advertisement -

ஆனால் இவர் ஹீரோவாக அறிமுகமானது கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான நான் படத்தின் மூலம்தான் இந்த படத்தினை ஜீவா ஷங்கர் இயக்கியிருந்தார். இவர் பிரபல ஒளிப்பதிவாளரான ஜீவாவிடம் துணை ஒளிப்பதிவாளராக இருந்தவர்தான். மேலும் இவர் ஆனந்த தாண்டவம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய போது நான் கதையை எழுத ஆரம்பித்து இருக்கிறார். ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக மாறி, தான் இயக்கிய முதல் படத்திலேயே ஹிட் கொடுத்தார் ஜீவா சங்கர்.

இயக்குனர் ஜீவா ஷங்கர்

சமீபத்தில் நான் திரைப்படம் வெளியாகி எட்டு ஆண்டுகள் ஆன நிலையில் ஜீவா சங்கர் பேட்டி ஒன்றில் பங்கேற்று பேசுகையில் நான் படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார். தாண்டவம் படத்தின் போதே ஆஸ்கார் ரவி சாருக்கு நான் இந்த கதையை சொன்னேன். அவருக்கு கதை பிடித்திருந்ததால் தனுஷிடம் கதையை சொல்ல ஏற்பாடு பண்ணிக் கொடுத்தார். பொல்லாதவன் பட ஷூட்டிங்கில் இருந்த தனுஷிடம் கதை சொல்ல போறேன்.

-விளம்பரம்-

முதன் முறையாக ஒரு நடிகருக்கு கதை சொல்லப் போகிறேன் என்பதால் மிகவும் பதட்டமாக இருந்தேன். ஆனால் அவர் என்னை ஒன்னும் பிரச்சனை இல்லை என்று என்னை கூல் பண்ணி கொண்டே இருந்தார். அவர் கதை கேட்ட நேரத்தைவிட என்னை ஆறுதல் செய்த நேரம் தான் அதிக. ம் இப்படி ஒரு இயக்குனர் எனக்கு கதை சொல்ல வந்திருந்தால் அதை நானே ஒப்புக் கொண்டிருக்க மாட்டேன். ஆனால் அவர் இரண்டு நாள் டைம் கேட்டு யோசித்து சொல்கிறேன் என்று சொன்னார். பின்னர் இரண்டு நாள் கழித்து இந்த படத்தில் தான் நடிக்க மறுக்கும் காரணம் குறித்து நீண்ட நேரம் என்னிடம் பேசினார். அவர் நடிக்காமல் போனதற்கு முழுக்க முழுக்க காரணம் நான் கதையை ஒழுங்காக சொல்லவில்லை என்பதால் தான். அதனால் தான் தனுஷால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது என்று கூறியிருக்கிறார்

Advertisement