அமெரிக்கா சென்று கர்ணன் படத்தை பார்த்த தனுஷின் மகன்கள் – இதான் காரணமா ?

0
1504
dhanush
- Advertisement -

‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற நாயகன் தனுஷ் நடிப்பில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் (ஏப்ரல் 9) வெளியாகியுள்ளது. ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்டி என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ஹிட் அடித்தது. மேலும், பண்டாரத்தி பாடல் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியதால் இந்த படத்தின் பாடல் வரிகளில் சில மாற்றங்களையும் செய்தார் மாரி செல்வராஜ். இப்படி வெளியாகும் முன்னரே பல சர்ச்சைகளை சந்தித்த இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

1995ல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியங்குளம் கிராமத்தின் மீது காவல்துறை கொடுமையான தாக்குதல் ஒன்றை நடத்தியது. அதில் பலர் கொல்லப்பட்டனர். பல கிராமங்கள் சூறையாடப்பட்டன. தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். இந்தப் பின்னணியை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது ‘கர்ணன்’ இந்த படத்திலும் வழக்கம் போல தனுஷ் தனது நடிப்பில் மிரட்டியுள்ளார்.

இதையும் பாருங்க : நாங்கள் இனி கணவன் – மனைவி இல்லை. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பகல் நிலவு தம்பதிகள்.

- Advertisement -

கொரோனா பிரச்சனை காரணமாக தமிழ் நாட்டில் திரையரங்குகளில் மீண்டும் 50 சதவிகித கட்டுப்பாடு என பல அச்சுறுத்தல்கள் இருந்தாலும் அதையெல்லாம் மீறி, கர்ணன் படம் வசூல் மழை பொழிந்து வருகிறது. முதல் மூன்று நாட்களில் 25 கோடி வரை வசூல் செய்திருக்கும் இப்படம், தனுஷின் கரியரில் மிகப்பெரிய ஓப்பனிங்கை பெற்ற படம் எனும் புதிய சாதனையையும் நிகழ்த்தியுள்ளது.

இப்படி ஒரு நிலையில் தனுஷ் மனைவி ஐஸ்வர்யா இந்த படத்தை அமெரிக்கா சென்று பார்த்துள்ளார். அதற்கு முக்கிய காரணமே  தி கிரே மேன் எனும் ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக அமெரிக்காவில் உள்ளார் தனுஷ். இப்படி ஒரு நிலையில் தனுஷ், தனது மனைவி மற்றும் மகன்களுடன், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள திரையரங்கில் ‘கர்ணன்’ படத்தின் சிறப்பு காட்சியை பார்த்து ரசித்திருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement