ரஜினிக்கு ஒரே வரியில் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன தனுஷ் – கடந்த ஆண்டு எப்படி சொல்லி இருக்கார் பாருங்க.

0
739
rajini
- Advertisement -

ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு தனுஷ் போட்டு இருக்கும் பிறந்தநாள் வாழ்த்து பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கோலிவுட்டில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை இவர் எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருக்கிறது. இதனால் இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும், வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினி அவர்கள் தற்போது ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைக்கிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

- Advertisement -

ஜெயிலர் படம்:

இவர்களுடன் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கிறார்கள். மேலும், இந்த படம் 2023 ஆம் ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை அடுத்து ரஜினி அவர்கள் இரண்டு படங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ரஜினி நடிக்கும் படங்கள்:

அதில் ஒன்று, தன்னுடைய மகள் ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் நடிக்கிறார். விஷ்ணு விஷால், விக்ராந்த் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்துக்கு சலாம் என பெயரிடப்பட்டுள்ளது. இன்னொரு படத்தை டான் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்குவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த இரண்டு படத்தையும் லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் இன்று ரஜினி தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

-விளம்பரம்-

ஒரே வரியில் வாழ்த்திய தனுஷ் :

ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு ரஜினி நடிப்பில் வெளியான பாபா படம் திரையரங்கில் ரீ ரிலீஸ் ஆகி இருந்தது.ரஜினி நடித்து வரும் ஜெயிலர் படத்திலிருந்து முத்துவேல் பாண்டியன் என்ற பாடலும் இன்று மாலை வெளியாகவுள்ளது. ரஜினிக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகரும் ரஜினியின் முன்னாள் மருமகனுமான தனுஷ் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

தனுஷ்ஷின் கடந்த ஆண்டு வாழ்த்து :

‘பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா’ என்று ஒரே வரியில் தனது வாழ்த்தை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தனுஷ் மற்றும் ரஜினியின் ரசிகர்கள் இந்த பதிவை பகிர்ந்து வருகின்றனர்.ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் தனுஷும் திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், சமீபத்தில் இருவரும் பிரிவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. அதே போல கடந்த ஆண்டு ரஜினியின் பிறந்தநாளில் அதிகாலை 1.16 மணிக்கே வாழ்த்து தெரிவித்த தனுஷ் ‘இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா, தி ஒன் அண்ட் ஒன்லி சைபர் ஸ்டார் சார். லவ் யூ சோ மச்’ என்று பதிவிட்டு இருந்தார். ஆனால், இந்த ஆண்டு காலை 7.55 மணிக்கு ஒரே வரியில் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார் தனுஷ்.

Advertisement