1,00,00,000 வியூஸ். ரௌடி பேபி செய்த சாதனை. கொலவெறி பாடலை குறிப்பிட்டு தனுஷ் போட்ட ட்வீட்.

0
1171
rowdy-baby
- Advertisement -

தமிழில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான “மாரி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. முதல் பாகம் அளவிற்கு இரண்டாம் பாகம் வரவேற்பை பெற தவறி மாபெரும் தோல்வியை தழுவியது. ஆனால், இந்த படத்தில் இடம்பெற்ற ரௌடி பேபி என்ற பாடல் மட்டும் பட்டி தொட்டி எங்கும் பரவி வேற லெவலில் ஹிட் அடித்தது பட குழுவினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

-விளம்பரம்-

பாலாஜி சாக்திவேல் இயக்கிய இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.,மேலும் , இந்த படத்தில் தனுஷ் சாய் பல்லவி, கிருஷ்ணா, டோவினோ தாமஸ், ரோபோ ஷங்கர், வினோத் என்று பல்வேறு நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்த படத்தில் பல்வேறு பாடல்கள் இடம்பெற்றிருந்தாலும் ‘ரௌடி பேபி’ பாடல் மட்டும் மாபெரும் ஹிட் அடைந்தது. இந்த பாடலின் வீடியோ பாடல் வெளியாவதற்கு முன்பாகவே இந்த பாடலை லட்சக்கணக்கானோர் டிக் டாக் செய்ததும் இந்த பாடல் பிரபலமானதற்கு ஒரு காரணமாக சொல்லலாம்.

- Advertisement -

அதே போல இந்த பாடலுக்கு பிரபு தேவா நடனமடைந்திருந்தார். பாடலுக்கு இணையாக இந்த பாடலில் இடம் பெற்ற நடனமும் ரசிகர்களை கவர்ந்தது. இந்த பாடலின் வீடியோ யூடியூபில் வெளியான 24 மணி நேரத்தில் பல மில்லியன் வீவ்ஸ்களை பெற்றது. அதே போல யூடியூபில் மிகவும் குறுகிய காலத்தில் (2 வாரம்) 130 மில்லியன் பார்வைகளை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்திருந்தது. யூடியூபில் தமிழ் பாடல்களில் நம்பர் 1 இடத்தை பிடித்ததன் மூலம் உலகளாவிய மேடையில் தமிழ் இசையை மீண்டும் உலக அளவில் கவனிக்க வைத்திருக்கிறது.

இந்த பாடல் யூடுயூபில் இந்த ஆண்டு உலகளவில் வெளியான பாடலில் 7 வது இடத்தை பிடித்தள்ளது. மேலும், இந்திய அளவில் இந்த பாடல் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட பாடல் என்ற வகையில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதுவரை இந்த பாடல், 71 கோடிக்கும் மேலான பார்வையாளர்களையும், 2.8 மில்லயன் லைக்ஸ்களையும் பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த பாடல் எதிர்பாராத விதமாக கொலவெறி பாடல் வெளியாகி 9ஆம் ஆண்டில் ரவுடி பேபி, 1 பில்லியன் பார்வையாளர்களை யூடுயூபில் கடந்துள்ளது என்று நடிகர் தனுஷ் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement