தாவணி கனவுகள் படத்தில் நடித்த குழந்தை பிரபல தொகுப்பாளினியா !

0
1632
Dhavani-kanavugal compressed

நடிகர் மற்றும் இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில் பல வெற்றி படங்கள் வந்துள்ளது. அவரது வெற்றிப்பட வருசையில் 1984 இல் வெளியான தாவனிக்கணவுகள் என்ற படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Priyadarshini

4 தங்கைகளை கொண்ட ஒரு அண்ணன் அவர்களை எப்படி வாழ்க்கையில் கரைசேர்கிறார் என்ற கதையாக அந்த படத்தை அமைத்திருந்தார் பாக்யராஜ்.இந்த படத்தில் தான் பாக்யராஜின் உதவியாளராக இருந்த நடிகர் பார்த்திபனும் போஸ்ட் மாஸ்டராக நடித்திருப்பார்.

இந்த படத்தில் கடைசி தங்கையாக ஒரு சிறுமி நடித்திருப்பார். இவர் படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் நல்லா காமெடியாக அமைந்தது.அந்த சிறுமி வேறு யாரும் இல்லை பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி டிடி-யின் அக்கா ப்ரியதர்ஷினி தான்.அந்த படத்திற்கு பின்னர் இதயகோவில்,நாகம்,குற்றவாளிகள் போன்ற படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

Anchor-priyadharshini

vj priyadarshini

பின்னர் சன் ,ஜீ,விஜய்,கலைஞர் டி வி போன்ற தொலைக்காட்சிகளில் 1000 கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். மேலும் கலைஞர் டி வி யில் ஒளிப்பாரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று முதல் பரிசையும் வென்றார்.1998 இல் பொதிகை டி வி யில் ஒளிபரப்பான விழுதுகள் என்ற மெகா தொடரில் நடித்த இவர் அதன் பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் தொடரிலும் நடித்தார்.

சிறு வயது முதலே குச்சிபுடி, பாரதம் போன்ற கலைகளை கற்றுவந்த இவர் தற்போது தர்ஷினி டான்ஸ் அகாடமி(DDA) என்ற நடன பள்ளியை நடத்தி வருகிறார்.