தனுஷ் தயாரிப்பில் ஹீரோவாக நடிக்கும் விஜய் டீவியின் கலக்கப்போவது யாரு காமெடி கிங்.

0
4579
thenaaa

விஜய் டீவியில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வரும் வருகைகள் ஒன்றும் புதிதல்ல. சந்தானம், சிவா கார்த்திகேயன், ரோபோ சங்கர் என லிஸ்ட் பெரிதாக போய்க்கொண்டே இருக்கும்.

theena அந்தவகையில் தற்போது அந்த லிஸ்ட்டில் சேர்ந்திருப்பவர் தான் தீனா. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் இந்த தீனா. அதன் பின்னர் அதே நிகழ்ச்சியில் தீவுர ரசிகன் என்ற போர்வையில் போன் செய்து அவரது கவுண்ட்டர் பேச்சுக்களால் பலரையும் கவர்ந்தவர்

தற்போது தனுசின் வொண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகியுள்ளார் தீனா. மலையாளத்தில் வெளிவந்த Kattappanayile Rithwik Roshan என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார்.

theenag

இதற்கு முன்னர் தனுஷ் இயக்கிய பா.பாண்டி படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்திருப்பார் தீனா. இந்நிலையில் தீனாவிற்கு மீண்டும் கை கொடுத்துள்ளார் நடிகர் தனுஷ்.