நான் சொன்னதும் என் முதுகுல நங்குன்னு குத்திட்டு – அவரு ஒரு மொக்க ஜோக் சொன்னாரு. அது என்னன்னா – தீனா அளித்த செம பேட்டி.

0
18019
dheena
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான “பிகில்” படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று உள்ளது. இதனைத் தொடர்ந்து கைதி படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் விஜய்யை வைத்து “மாஸ்டர்” படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, அழகம் பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Comedian Dheena to join Vijay's Thalapathy64 | Tamil Movie News ...

இந்த படத்தில் கலக்கப்போவது யாரு தீனாவும் நடித்து உள்ளார். விஜய் தொலைக்காட்சியில் பிராங்க் கால் மூலம் பிரபலமடைந்த தீனா பா பாண்டி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து கைதி படத்தில் நடித்த தீனா தற்போது மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார்.

- Advertisement -

மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய்க்கு நடத்த வருமான வரித்துறை சோதனையை கிண்டல் செய்யும் விதமாக ‘ecr ரோடு சும்மா இருக்குதுனு அடிக்கடி ரெய்டு போக கூடாது’ என்று இவர் பேசிய வசனம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் தீனா, விஜய் டிவி பிரியங்காவிடம் வீடியோ சாட் செய்து கொண்டிருந்த போது மாஸ்டர் பட ஷூட்டிங்கில் விஜய்யிடம் பேசிய அனுபவம் குறித்து பேசி இருந்தார்.

#Dheena speech abt #Thalapathy fun moment on #Master spot ????

Navas shareef ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಸೋಮವಾರ, ಜೂನ್ 8, 2020

அதில், ஒரு முறை விஜய்யிடம் தான் ஒரு மொக்க ஜோக் சொன்னதாகவும் அதற்கு விஜய் பதிலுக்கு ஒரு மொக்க ஜோக் சொன்னதாகவும் கூறியுள்ளார். விஜய்யிடம் மொக்கை ஜோக் ஒன்று சொன்னதற்கு அவர் பதிலுக்கு ‘ஏரியாவிற்கு ஆப்போசிட் என்ன’ என்று கேட்டதாகவும். அதற்கு அவர் தெரியவில்லை என்று சொன்னதும் ‘ஏரியாவிற்கு ஆப்போசிட் எறங்குயா’ என்று தன்னிடம் மொக்கை ஜோக் சொன்னதாகவும் கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement