ஹீரோயினாகும் பிரபல சீரியல் நடிகை..! எந்த படம்..! யார் தெரியுமா..? புகைப்படம் உள்ளே.!

0
1711
Actress Vani Bhojan

தமிழ் சீரியல்கள் பல நடிகர் , நடிகைகளுக்கு சினிமாவில் நுழைய ஒரு பாலமாக அமைந்துள்ளது. அதுவும் குறிப்பாக சின்னத்திரை நடிகைகள் பிரபலமான சீரியல்களில் நடித்துவிட்டால் அவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் தேடி வருகின்றது. அந்த வகையில் சன்டிவின் பிரபல நடிகை ஒருவர் சினிமாவில் தனது வருகையை பதிவிட்டுள்ளார்.

Deivamagal

சமீபத்தில் விஜய் டிவியில் சீரியல்களில் நடித்து வந்த ப்ரியா பவானி ஷங்கர் “மேயாத மான்” என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தற்ப்போது பல ஆண்டுகள் வெற்றிகராக ஓடிக்கொண்டிருந்த தெய்வமகள் தொடரில் நடித்த வாணி போஜன் சினிமாவில் நடிக்க போகிறாராம்.

நடிகை வாணி போஜன், இயக்குனர் லோகேஷ் குமார் என்பவறின் இயக்கத்தில் “என்4” என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறாராரம். இயக்குனர் லோகேஷ் குமார் தமிழில் ஏற்கனவே “மை சன் இஸ் எ கேய் ” வ்ன்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vani-Bhojan

தற்போது இவர் இயக்கவிருக்கும் இவரது இரண்டாவது படமான “என்4” படம் ஒரு கமர்ஷியல் த்ரில்லர் படமாக இருக்குமாம். இந்த படத்தின் படப்பிடிப்புகளுக்காக சென்னை காசிமேட்டில் ஒரு செட் அமைக்கப்பட்டு இருக்கிறதாம். இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இந்த படத்தின் இயக்குனர் சந்தோஷ் குமார்.