சன் டிவியில் 3 வருடமாக ஒளிபரப்பான சீரியல் தான் தெய்வமகள்.இந்த தொடர் குடும்ப பெண்கள் அனைவராலும் விரும்பி பார்க்கப்படுவது ஆச்சர்யம் இல்லை. ஆனால் இந்த சீரியலில் வரும் அன்னியார் என்னும் கதாபாத்திரத்தை நெட்டிசன்களும் பார்த்து மரண களாய் களாய்த்தனர். இவரை எத்தனை முறை கொன்றாலும் மீண்டும் மீண்டும் வருவார்.(WWE)டபள்யூ டபள்யூ ஈ அண்டர் டேகருக்கு பிறகு இவருக்கு தான் அதிக உயிர் என்றெல்லாம் களாய்த்தனர்.
இந்த சீரியலில் அண்ணியார் காயத்ரியாக நடித்தவர் சீரியல் நடிகை ரேகா கிருஷ்ணப்பா. இவர் தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் இவருக்கு புகழை பெற்றுத்தந்தது தெய்வமகள் சீரியல் தான். இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் வசந்த் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அண்ணியாருக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது, ஆனால் இது வரை அவரை மீடியா கண்களுக்கு அவ்வளவாக அண்ணியார் காயத்ரி காட்டியது கிடையாது. அவரது மகளின் பெயர் பூஜா, தற்போது தனது 10 ஆம் வகுப்பை முடித்து விட்டு விடுமுறையில் இருக்கிறார் பூஜா.
நீண்ட நாட்களாக தனது மகளின் விவரத்தை பற்றி வெளியில் அவ்வளவாக வெளிக்காட்டிக்கொள்ளாத ரேகா , சமீபத்தில் தனது மகளுடன் ஒரு பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ளார். மேலும் தற்போது ரேகாவின் மகள் பூஜாவின் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. இதோ அவரின் புகைப்படம்