சந்தானத்தின் தில்லால் ஓரம்கட்டபட்ட சிம்பு ராஜா.! சிம்பு வசூலில் நெருங்கும் சந்தானம்.!

0
848
Dhilluku-Duddu-2
- Advertisement -

சந்தானம் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘தில்லுக்கு துட்டு’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஹாரர் காமெடி படமாக உருவாகிய இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் நேற்று வெளியானது.

-விளம்பரம்-

முதல் பாகத்தை இயக்கிய ராம் பாலா தான் இந்த பாகத்தயும் இயக்கியுள்ளார். ஆனால், முதல் பாகத்தில் குறையாக சொல்லப்பட்ட லவ் காட்சிகளை சற்று குறைத்து இந்த படத்தை முழுக்க முழுக்க காமெடி படமாக கொடுத்துள்ளார் ராம் பாலா.

இதையும் படியுங்க : வந்தா ராஜாவாதான் வருவேன் முதல் நாள் வசூல்.! பால் ஊத்திடுவாங்களா.! 

- Advertisement -

ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ‘தில்லுக்கு துட்டு 2’ சென்னையில் ஒரே நாளில் 40 லட்சம் வசூல் செய்துள்ளது. மேலும், தமிழகத்தில் மட்டும் 3.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் வெளியான சிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ சென்னையில் முதல் நாளில் 43 லட்சம் தான் வசூலும் தமிழகத்தில் 4.8 கோடி வசூலும் செய்திருந்தது.

ஆனால், இரண்டாம் நாளே சிம்பு படத்தின் வசூல் அதல பாதாளத்திற்கு சென்றது. ஆனால், சந்தானத்தின் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்துள்ளதால் இனி வரும் நாட்களிலும் நல்ல வசூலை பெரும் என்று எதிர்பார்க்கபடுகிறது. ஏற்கனவே வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை பல திரையரங்குகளில் இருந்து நீக்கிவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement