வந்தா ராஜாவாதான் வருவேன் முதல் நாள் வசூல்.! பால் ஊத்திடுவாங்களா.!

0
447
Vantha-Rajavathan-varuven

செக்க சிவந்த வானம் படத்திற்கு பின்னர் சிம்பு நடிப்பில் வெளியாகியுள்ளது ‘ வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம். சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று வெளியான இந்த படம் சென்னையில் ரூ 43 லட்சம் தான் வசூல் செய்துள்ளதாம், பலரும் எப்படியும் ரூ 80 லட்சம் வரை வசூல் வரும் என்று எதிர்ப்பார்த்தார்கள். இது சிம்பு ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இதையும் படியுங்க : ராஜாவாக வந்தாரா சிம்பு.! வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் விமர்சனம்.!

- Advertisement -

வெளியாவதற்கு முன்பாகவே இந்த படம் வெளியாகும் போது வேற லெவலில் செய்யுங்கள் என்றும் அண்டாவில் பால் ஊத்துங்க என்றும் கூறியிருந்தார். ஆனால்,படத்தின் வசூலை பார்த்தால் விரைவில் படத்திற்கு பால் ஊத்திவிடுவார்களோ என்று தான் தோன்றுகிறது.

மேலும், நேற்று வெளியான ஜி வி பிரகாஷின் ‘சர்வம் தாளமயம்’ மற்றும் மம்மூட்டியின் ‘பேரன்பு’ திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் வரும் நாட்களில் சிம்பு படத்திற்கு கூட்டம் செல்வது பெரும் சந்தேகம் தான்.