தோனின்னா யாருனு நெனச்சிங்க..! பழைய ரெகார்ட் எடுத்து பாருங்க..!

0
1065
Ganguly
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக ஆட்டதிறனில் சறுக்கலை கண்ட தோணி சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி சென்னை அணிக்கு கோப்பையும் வென்று தந்து தனது பழைய பார்மை நிரூபித்தார்.

-விளம்பரம்-

Dhoni

- Advertisement -

இந்திய அணிக்காக அணைத்து வடிவிலான உலக கோப்பைகளையும் வென்றுத்தந்த பெருமையும் தோனிக்கே சாரும்.இத்தனை சாதனைகளை படைத்தாலும் தோனி மீது இன்னும் சிலர் குறை கூறுவது ஓய்ந்த பாடில்லை. அதே போல வரும் உலக கோப்பையில் தோனி விளையாடுவதை குறித்தும் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

தோனியின் ஆட்டத்திறன் குறைந்துள்ளது என்றும் அதனால் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற வேண்டும் என்று இந்நிலையில் சமீபத்தில் தோனி மீது எழும் விமர்சனங்களுக்கு பதிலித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரும் கேப்டனுமான கங்குலி ,தோனிக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

-விளம்பரம்-

Ganguly

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கங்குலி பேசுகையில், வரும் உலக கோப்பையில் தோனி தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவார். உலக கோப்பைக்கு முன்னதாக வரும் மேற்கிந்திய அணிக்கு எதிரான தொடரிலும் அவர் சிறப்பாக விளையாடிய அவசியம் உள்ளது. அதே போல கடந்த கால ரெகார்ட்களை பார்க்காமல் தற்போதைய ஆட்டத்தை வைத்து மட்டும் அவரை விமர்சிக்க கூடாது என்று தெரிவித்துள்ளார்.

Advertisement