தல தோனிக்கு ரொம்ப பிடித்த தமிழ் நடிகர் யார் தெரியுமா ! அவரே சொன்னது !

0
2475
dhoni

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தல’யாக வந்து தற்போது தமிழக கிரிக்கெட் ரசிகர்களின் கிரிக்கெட் கடவுளாக மாறி இருப்பவர் தோனி. அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் சென்னை அணி மீண்டும் தொடருக்கு திரும்ப உள்ளதால் அவரை மீண்டும் மஞ்சள் உடையில் பார்க்க ஆர்வமாக உள்ளனர் ரசிகர்கள்.
surya
தற்போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடி வரும் தோனி ப்ரீயாக இருக்கும் நேரத்தில் பல விளம்பர படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த ஒரு விளம்பர படத்தை இயக்கியவர் ‘எமன்’ பட இயக்குனர் ஜீவா சங்கர்.

தல தோனியிடம் நிறைய பேசிய ஜீவா சங்கர் அவருக்கு பிடித்த தமிழ் நடிகர்கள் பற்றி கேட்டுள்ளார். அதற்கு தல அளித்த பதிலானது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது எனக் கூறியவர், தமிழ் நடிகர்கள் விஜய், அஜித், சூரியா ஆகியோரது படங்களின் வசூல் பற்றியும் பேசியுள்ளார் தோனி.

சூர்யாவை அதிகம் பிடிக்கும் எனவும் அவரது படங்களை சப் டைட்டிலுடன் பார்ப்பேன் எனவும் கூறியுள்ளார் தல. முன்னர் ஒரு முறை ‘தோனி’ பட ப்ரோமோசனுக்கு சென்னை வந்திருந்த போது சூர்யாவின் சிங்கம் படம் தோனிக்கு மிகவும் பிடித்திருந்ததாக கூறியது குறிப்பிடத்தக்கது.