ஸ்ரீசாந்தை தொடர்ந்து நயன் மூலம் தமிழ் சினிமாவில் களமிறங்கும் தோனி – குஷியில் ஆழ்ந்த ரசிகர்கள். (முழு விவரம் இதோ)

0
84
nayan
- Advertisement -

நடிகை நயன்தாரா நடிக்கும் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளராக தோனி களம் இறங்கி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் தோனி. இவர் கிரிக்கெட் உலகில் செய்த சாதனைகளை விரல் விட்டு எண்ணி சொல்ல முடியாது. அந்த அளவிற்கு இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர். இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த தோனி இந்தியாவிற்கு உலகக்கோப்பைகளை பெற்று தந்ததுமில்லாமல் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாகவும், உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பராகவும் திகழ்ந்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஒய்வு பெற்றாலும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். அதோடு இவரின் வாழ்கை திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து தோணி சினிமாவிற்கு எப்போ வருவார்? என்று பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருந்தனர். இந்நிலையில் பலரும் எதிர்நோக்கி காத்திருந்த தோனி அவர்கள் தற்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கிறார். அதுவும் தமிழ் திரைப்படம் ஒன்றை தோணி தயாரிக்க இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

தோணி தயாரிக்கும் படம்:

தற்போது தோனி அவர்கள் தனி தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். இதன் மூலம் தமிழில் புதிய திரைப்படத்தை தயாரிக்க இருக்கிறார். மேலும், நடிகர் ரஜினிகாந்திடம் உதவியாளராக இருந்த சஞ்சய் என்பவர் தயாரிப்பு நிறுவனத்தில் இணைந்து இருக்கிறார். அதுவும் இவர்கள் முதல் கட்டமாக நடிகை நயன்தாரா நடிக்கும் படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்த புது படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

நயன்தாராவின் திரைப்பயணம்:

தமிழ் சினிமாவில் நடிகைகள் நீண்ட காலம் நிலைப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். ஆனால், சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகை நயன்தாரா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று இருக்கிறது. சமீபகாலமாகவே இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

காத்துவாக்குல ரெண்டு காதல் படம்:

அதனால் நாட்கள் செல்ல செல்ல இவருடைய ரசிகர்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். இவர் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல் படங்களை தயாரித்தும் இருக்கிறார். தன் காதலன் விக்னேஷ் உடன் இணைந்து நயன்தாரா படங்களை தயாரித்து இருக்கிறார். சமீபத்தில் நயன் நடித்து இருந்த காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். மேலும், இந்த படத்தில் விஜய்சேதுபதி, சமந்தா, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், கலா மாஸ்டர் கிரிக்கெட் பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

நயன் நடிக்கும் படங்கள்:

இந்த படம் முழுக்க முழுக்க ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து கனெக்ட், லயன் போன்ற பல திரைப்படங்களில் நயன் நடித்து வருகிறார். தற்போது நயன் அவர்கள் காட் ஃபாதர் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் மலையாளத்தில் வெளியான லூசிஃபர் படத்தின் ரீமேக் ஆகும். இதுமட்டும் இல்லாமல் வேறு சில திரைப்படங்களிலும் நயன் கமிட்டாகி நடித்து வருகிறார்.

Advertisement